தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஆணையம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்பது தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் ஆணையமாகும். தமிழ் நாட்டில் விளையாட்டினையும் உடல் தகுதியினையும் மேம்படுத்தவும் அரசு, விளையாட்டுச் சங்கங்கள் இதர விளையாட்டு அமைப்புகளின் வளங்களை ஒருங்கிணைக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.[1][2]

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
சுருக்கம்SDAT
உருவாக்கம்1992
நோக்கம்விளையாட்டு மேம்பாடு
தலைமையகம்சென்னை
தலைமையகம்
சேவை பகுதி
தமிழ்நாடு
வலைத்தளம்www.sdat.tn.gov.in

வரலாறு

தொகு

விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகம் ஆகிய இரண்டையும் இணைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற புதிய அமைப்பு 1992 ஜூலை 18 அன்று உருவாக்கப்பட்டது.[3]

நோக்கங்கள்

தொகு
  • திறமை கொண்டவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல்
  • மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளைஞர்களைத் தயார் செய்தல்
  • போட்டிச் சூழலை உருவாக்கி உடல் தகுதியை மேம்படுத்தல், திறமைசாலிகளை அடையாளம் காணல், போட்டித்திறனை வளர்த்தல்
  • விளையாட்டிற்கேற்ற உள்கட்டமைப்பை அமைத்து அனைத்து நிலை போட்டிகளுக்கும் தயார் செய்தல்
  • வீரர்களுக்கான நவீன நுணுக்கங்களைக் கற்றுக் கொடுக்க உரிய பயிற்சி, பயிலரங்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை அமைத்தல்

செயல்பாடுகள்

தொகு
  • ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்சியாளரை நியமித்து இலவசப் பயிற்சி அளிக்கிறது.
  • விளையாட்டுப் பள்ளிகள்,விடுதிகள் போன்றவற்றை நடத்துகிறது.
  • இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உடற்திறனாய்வுகளை நடத்திப் பயிற்சி முகாம்களை நடத்துகிறது
  • அண்ணா பிறாந்தநாளில் சைக்கிள் போட்டி நடத்துகிறது.
  • முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளாவிலான போட்டிகளை நடத்துகிறது
  • தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் வெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "About SDAT". sdat.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
  2. "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும்: அரசு உத்தரவு". தினகரன். https://www.dinakaran.com/sports-association-tn-sports-development-authority-accreditation/. பார்த்த நாள்: 25 October 2023. 
  3. "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் உதவிகள் என்னென்ன?". தினமணி. https://www.dinamani.com/sattamani/2019/jan/30/in-what-way-tamilnadu-sports-development-authority-helps-their-top-rank-players-3086121.html. பார்த்த நாள்: 25 October 2023.