தமிழ்நெறி விளக்கம்

தமிழ்நெறி விளக்கம் ஒரு தமிழ் இலக்கண நூல். இதன் பெரும் பகுதி இன்று மறைந்துவிட்டது. இதன் பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகிய அகப்பொருளின் களவியல் சார்ந்த 21 பாடல்கள் உட்பட மொத்தம் 25 பாடல்கள் மட்டுமே இப்போது கிடைத்துள்ளன.[1]. இது தோன்றிய காலம் 9 ஆம் நூற்றாண்டு.

இறையனார் களவியல் உரை, யாப்பருங்கல விருத்தி உரை, சிலப்பதிகார அரும்பத உரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரை, களவியல் காரிகை உரை ஆகிய நூல்கள் தமிழ் நெறி விளக்கத்திலிருந்து பாடல்களை மேற்கோளாகப் பயன்படுத்தி உள்ளன.

இந்நூலில் தற்போது கிடைத்துள்ள பகுதி முழுதும் ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டுள்ளது. இறையனார் களவியல் என்னும் முந்திய அகப்பொருள் நூலைச் சுருக்கி எழுதியதே இந்த நூல் என்று சொல்லப்படுகிறது. இறையனார் களவியல் நூலின் 60 பாடல்களில் சொல்லப்பட்டவை இதிலே 25 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன.

பதிப்புகள்

தொகு

மிகவும் சிதைந்த நிலையில் கிடைத்த ஓர் ஏட்டுப் பிரதியிலிருந்து எடுக்கக்கூடியதாக இருந்த இந்த 25 பாடல்களையும் உ. வே. சாமிநாதையர் 1937-ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.

குறிப்புகள்

தொகு
  1. இளங்குமரன், 2009. பக். 228.

உசாத்துணைகள்

தொகு
  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

தமிழ்நெறி விளக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நெறி_விளக்கம்&oldid=4000189" இலிருந்து மீள்விக்கப்பட்டது