தமிழ்ப் பருவப்பெயர்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்மொழிக்குள்ள பல சிறப்புகளில் சொற்சிறப்பும் ஒன்று. தமிழ்மொழியிலுள்ள பருவப்பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இச்சொற்களின் சிறப்பு, உருவத்தையும் பருவத்தையும் காட்டி நிற்பதாகும்.
ஆண்களின் பருவப்பெயர்கள்
தொகு- 1 - 12 வயது ஆண் - பாலகன்
- 12 - 24 வயது ஆண் - விடலை.
- 24 - 36 வயது ஆண் - காளை.
- 36 - 48 வயது ஆண் - மீளி.
- 48 - 60 வயது ஆண் - மறவோன்.
- 60 - 72 ஆண் - திறவோன்.
- 72 வயதுக்கு மேல் ஆண் - முதுமகன்.
மற்றொரு பட்டியல்
தொகு- பிள்ளை - குழந்தைப்பருவம்
- சிறுவன் - பாலப்பருவம்
- பையன் - பள்ளிப்பருவம்
- காளை - காதற்பருவம்
- தலைவன் - குடும்பப்பருவம்
- முதியோன் - தளர்ச்சிப்பருவம்
- கிழவன் - மூப்புப்பருவம்
பெண்களின் பருவப்பெயர்கள்
தொகு- பேதை - 1 வயது முதல் 8 வயது வரை
- பெதும்பை - 9 வயது முதல் 10 வயது வரை
- மங்கை - 11 வயது முதல் 14 வயது வரை
- மடந்தை - 15 வயது முதல் 18 வயது வரை
- அரிவை - 19 வயது முதல் 24 வயது வரை
- தெரிவை - 25 வயது முதல் 29 வயது வரை
- பேரிளம் பெண் - 30 வயதுக்கு மேல்
பூவின் பருவங்கள்
தொகு- அரும்பு - அரும்பும்நிலை
- மொட்டு -மொக்குவிடும்நிலை
- முகை -முகிழ்க்கும் நிலை
- மலர் -பூநிலை
- அலர் -மலர்ந்த நிலை
- வீ -வாடும்நிலை
- செம்மல் -இறுதிநிலை
இலைகளின் பருவப்பெயர்கள்
தொகு- கொழுந்து -குழந்தைப்பருவம்
- தளிர் -இளமைப்பருவம்
- இலை -காதற்பருவம்
- பழுப்பு -முதுமைப்பருவம்
- சருகு -இறுதிப்பருவம்
உசாத்துணை நூல்கள்
தொகு- பன்னிருபாட்டியல், கழக வெளியீடு