தமிழ்ப் பழமொழிகள் தொகுதி 2 (நூல்)

தமிழ்ப் பழமொழிகள் தொகுதி 2 கி. வா. ஜகந்நாதன் தொகுத்த[1]நூலாகும்.

நூலாசிரியர் தொகு

கி. வா. ஜகந்நாதன் (1906-1988). தமிழ் இதழாளர், எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்டவர் ஆவார்.

பதிப்பு விவரங்கள் தொகு

இந்நூலின் பதிப்பாளர் ஜெனரல் பப்ளிஷர்ஸ், இந்நூலின் முதற் பதிப்பு 2001 இல் வந்தது. இரண்டாம் பதிப்பு 2006 இல் வெளிவந்ததுள்ளது.

நூலின் முகவுரைச் செய்திகள் தொகு

இந்நூலுக்கான முகவுரையை நூலாசிரியர் 1998 இல் எழுதியுள்ள நூலாசிரியர் இந்த நூலிலுள்ளப் பழமொழிகளை தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சேகரித்ததாகக் கூறுகின்றார். இந்நூலின் முகவுரையில் பழமொழியின் தன்மைகள், அதன் வேறு பெயர்கள் குறித்து அவர் விவரித்துள்ளார்.

நூலறிமுகம் தொகு

இத்தொகுப்பில் கி.வா.ஜ 5818 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். பல பழமொழிகளுக்கு அதற்கான பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் பழமொழிகள் அகர வரிசைப்படி தொகுத்து அளிக்கப் பெற்றுள்ளன. இந்நூலில் ‘ஒ’ முதல் ‘சூ’ வரையிலான பழமொழிகள் தொகுக்கப் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் உள்ளவை பனுவல் பழமொழிகள் ஆகும். பனுவல் பழமொழிகள் என்பன யார் கூறினார், அவை எந்தப் பொருண்மையில் பயன்படுத்தப் பெறுகின்றன என்னும் குறிப்புகளைக் கொண்டிராதப் பழமொழிகள் ஆகும்.இந்நூல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பெற்ற நூல் ஆகும்.

மேள்கோள்கள் தொகு

  1. கி. வா. ஜகந்நாதன், 2001, தமிழ்ப் பழமொழிகள் தொகுதி 2, சென்னை: ஜெனரல் பப்ளிஷர்ஸ்.