தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு

தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு விஜய் தொலைக்காட்சியில் இடம்பெறும் ஒரு தமிழ் மொழிப் போட்டி நிகழ்ச்சியாகும். தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே நிகழ்ச்சியின் நோக்கங்களில் ஒன்று. இந்தப் போட்டி சனவரி 2009 முடிவடைந்தது. அரை இறுதிச் சுற்றுக்கு விசயன், அருள் பிரகாச், அபிராமி ஆகியோர் தேர்வு பெற்றனர். இறுதிச் சுற்றுக்கு விசயன், அருள் பிரகாச் ஆகியோர் தேர்வு பெற்றனர். இதில் விசயன் வெற்றி பெற்றார். வன்னியில் ஈழத் தமிழர் படும்பாடு பற்றி விசயன் உணர்ச்சிபூர்வமாக பேசியது இங்கு குறிப்பிடத்தக்கது.

போட்டியின் வெற்றியாளர் ஐந்து இலட்சம் இந்திய ரூபாய்கள் பரிசு பெற்றார்.

இந்தப் போட்டி பல சுற்றுக்களாக நடைபெற்றது:

  • ஒரு தலைப்பில் பேசல்
  • இலக்கியச் சுருக்கம்
  • வாதம் - விவாதம்
  • தமிழ் உரையாடல்
  • பழமொழிக் குட்டிக்கதை
  • காட்சிக்கு பேச்சு சுற்று
  • ஓவியச் சுற்று
  • அரசியல் விவாத மேடை
  • மக்கள் மனசு சுற்று
  • மரபுக்/புதுக் கவிதைச் சுற்று
  • தமிழிசைச் சுற்று
  • இறுதிச் சுற்று (தமிழர் நேற்று, இன்று, நாளை)
  • இறுதிச் சுற்று

இந்தப் போட்டிக்கு நடுவராக "தமிழ்க் கடல்" என்று போற்றப்படுபவரான நெல்லைக் கண்ணனும் வேறு ஒரு தமிழறிஞரும் உள்ளார்கள். நெல்லை கண்ணன் இலக்கிய இலக்கணத் தவறுகளை ஆணித்தரமாக சுட்டிக்காட்டினாலும், அவ்வப்பொழுது தனது கருத்துக்களையும் தீவிரமாக பங்களிப்பாளர்களிடம் முன்வைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.[1]

இந்தப் போட்டி நிகழ்ச்சி, தமிழ்நாட்டிலும் உலகத் தமிழரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவற்றைப் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

வெளி இணைப்புகள்

தொகு