வஞ்சி தமிழ்வளர் மன்றம்

(தமிழ்வளர் மன்றம் - வஞ்சியில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் மாங்குடி மருதன் தலைமையில் புலவர்கள் கூடித் தமிழ் பாடியது போலவே காவிரிப்பூம்பட்டினத்திலும், வஞ்சிமாநகரிலும் தமிழ் வளர்க்கும் மன்றங்கள் இருந்தன.

பதிற்றுப்பத்து தொகு

"கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து" (63-9)

பதிற்றுப்பத்து ஆறாம் பத்துத் தலைவன் செல்வக்கடுங்கோ வாழியாதன். இவனைச் சிறப்பித்துக் கபிலர் 10 பாடல்கள் பாடியுள்ளார். இவன் சிறிய இலைகளையுடைய உழிஞைப் பூ சூடிப் போருக்குச் சென்றானாம். அப்போது அவன் பகைநாடுகளிலிருந்து கொண்டிப்பொருள்களைக் கொண்டுவந்தானாம். அவற்றைத் தண்டமிழ் செறிவதற்குப் பயன்படுத்தினானாம்.

விளக்கம் தொகு

  • தண்டமிழ்ச் செறித்து - என்று ஒற்று மிக்கு இருந்தால் கொண்டியைத் தமிழ்நாட்டில் செறித்து வைத்தான் என்று பொருள் கொள்ளவேண்டும்.
  • தண்டமிழ் செறித்து என்று ஒற்று மிகாமல் இருந்தால் தண்டமிழைச் செறித்து எனப் பொருள் கொள்ளவேண்டும்.
  • பாடலில் தண்டமிழ் செறித்து என ஒற்று மிகாமல் உள்ளது.
  • தமிழைச் செறித்தல் என்பது தமிழைத் திண்மையுறச் செய்தல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஞ்சி_தமிழ்வளர்_மன்றம்&oldid=1940104" இலிருந்து மீள்விக்கப்பட்டது