தமிழ் இலக்கணம் (இலத்தீன்)

தமிழ் இலக்கணம் அல்லது கிறம்மாற்றிக்கா தமுலிகா (இலத்தீன்: Grammatica Damulica) என்பது 1716 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பாலக்கு -ஆல் வெளியிடப்பட்ட இலத்தீன் மொழி நூல் ஆகும். இது தரங்கம்பாடியில் தொகுக்கப்பட்டு, இயேர்மனியில் ஏல் (Halle( நகரில் வெளியிடப்பட்டது. ஐரோப்பிய மொழியில் வெளிவந்த முதல் தமிழ் இலக்கண நூல் இதுவாகும். இந்த நூல் இலத்தீன் மொழி அறிந்த கிறித்தவ சமயம் பரப்புவோருக்காக எழுதப்பட்டது. இது ஆங்கில மொழிக்கு அண்மையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.