தமிழ் எண் கணித சோதிடம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம்.
ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட எண்கள் என்று எப்படி தேர்வு செய்யப்படுகிறது? ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான எண்கள் கண்டறியப்படுகிறது. உதாரணமாக, முத்துக்கமலம் பிறந்த நாள் 21-03-1999 என்று வைத்துக் கொள்வோம்.
முத்துக்கமலத்தின் பிறந்த நாள் 21 என்பதால் இவரின் பிறந்தநாளின் கூட்டுத்தொகை 3.
பிறந்த நாள் வழியிலான எண் - 3
முத்துக்கமலம் ஆங்கில எழுத்துக்களின்படி MUTHUKAMALAM பெயரின் கூட்டு எண் - 5
4+6+4+5+6+2+1+4+1+3+1+4 = 41 = 5
ஆங்கிலப் பெயர் வழியிலான எண் - 5
ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள்
A, I, J, Q, Y – 1
B, K, R, - 2
C, G, L, S – 3
D, M, T – 4
E, H, N, X – 5
U, V, W – 6
O, Z – 7
F, P - 8
தமிழ் எண்கணிதம்
தொகுதமிழ் எண்கணிதம் என்பது தமிழில் எழுதப்பட்ட ஆங்கில எண்கணித முறை அல்ல. முழுக்க முழுக்கத் தமிழ் முறைப்படி எழுதப்பட்ட எண்கணிதம் ஆகும். உலகிலேயே முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் எழுதப்பட்ட எண்கணித முறை தமிழ் எண்கணித முறை ஆகும். இது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் விசயம் ஆகும். ஆங்கில எண்கணித முறை தவறானது என்று இங்கே நிறுவப்பட்டுள்ளது. தமிழ் எண்கணித முறை எவ்வாறு சரி என்பதும் இங்கே விளக்கப்பட்டுள்ளது. ஆங்கில எண்கணிதம் முறையினை இதுநாள் வரையிலும் பின்பற்றி வந்த தமிழ் மக்கள் அனைவரும் அந்த தவறை மேலும் செய்யாமல் நமது பண்பாட்டிற்கு ஏற்ற தமிழ் எண்கணிதத்தினை பின்பற்றுவதே அறிவுடைமை ஆகும்.
ஆங்கில எண்கணிதமுறையின் தவறுகள்
தொகுஇம்முறையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எவ்வித அடிப்படையும் இன்றி மதிப்பெண்களை வழங்கி உள்ளனர். ஆங்கில எழுத்துக்களுக்கு மேல்நாட்டு அறிஞர்கள் பலரும் பலவிதமான மதிப்பெண்களை வழங்கி உள்ளனர். நாம் பயன்படுத்துகின்ற ஆங்கில எண்கணித முறையான சீரோ எண்கணித முறையிலும் கூட மதிப்பெண்கள் எவ்வித அடிப்படையும் இன்றி எதேச்சையாக வழங்கப்பட்டு உள்ளன. சான்றாக 'b' க்கு மதிப்பு 2 ஆகவும் 'l' க்கு மதிப்பு 3 ஆகவும் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு கொடுத்ததற்கு எவ்வித அடிப்படை விதிகளும் பின்பற்றப் படவில்லை. சரியான அடிப்படை இல்லாததால் இம்முறையினை போலியான முறை என்று கூறலாம்.
ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களுக்கு இம்முறையில் ஒரே மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. சான்றாக, வெற்றியும் தோல்வியும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆனால் இம்முறையில் இந்த இரண்டு சொற்களுக்கும் ஒரே மதிப்பெண் (26) வருகிறது. இது இம்முறையில் உள்ள குளறுபடியினைத் தெளிவாகக் காட்டுகிறது.
ஒரே இடத்தில் பிறக்கின்ற வேறு வேறு ஒலிகளுக்கு வேறு வேறு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. சான்றாக 'l' உம் 'n' உம் ஒரே இடத்தில் பிறப்பவை. இவற்றுக்கு வேறுவேறு மதிப்பெண்கள் வழங்கி உள்ளனர். இது தவறாகும். ஏனென்றால் ஒரு உண்மையான தாய் தனக்குப் பிறந்த எல்லா குழந்தைகளையும் ஒன்றாகவே மதிப்பாள். அடிப்படை மட்டுமின்றி வழங்கிய முறையிலும் தவறு உள்ளது என்பதற்கு இது சான்றாகும்.
ஆங்கில எண்கணித முறையில் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் ஒரு ஆட்சிக்கோள் இருக்கும். சான்றாக எண் 1 க்கு சூரியன், 2 க்கு சந்திரன், 6 க்கு சுக்கிரன். ஆனால் கோளுக்கும் எண்ணுக்கும் உள்ள தொடர்பு வரையறுக்கப் படவில்லை. அதாவது எவ்விதமான அடிப்படையும் இன்றி கோள்களுக்கு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. கோள்களின் ஆங்கிலப் பெயர்களின் அடிப்படையிலாவது எண்களை வழங்கி இருக்கலாம். சான்றாக சனி கிரகத்தின் ஆங்கிலப் பெயரான 'SATURN' என்பதில் உள்ள எழுத்துக்களின் மதிப்பெண்களைக் கூட்டினால் 21 அதாவது 3 வரும். எனவே சனி கோளுக்கு எண் 3 ஐ வழங்கி இருக்கலாம். இவ்வாறே ஏனைய கோள்களுக்கும் வழங்கி இருக்கலாம். ஆனால் அவ்வாறு வழங்கப் படவில்லை. எவ்வித அடிப்படையும் இன்றி கோள்களுக்கு எண்கள் வழங்கப்படிருப்பது ஆங்கில எண்கணித முறையின் 'கண்மூடித் தனமான' போக்கை காட்டுகிறது.
இம்முறையில் பெயரின் முதல் எழுத்தாக வரும் ஆங்கில எழுத்தின் வடிவத்தின் அடிப்படையில் அந்த எழுத்தை தனது பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுடைய குண நலன்கள் இன்னவாறு இருக்கும் என்றும் கூறியுள்ளனர். சான்றாக 'A' என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களின் குணங்கள் இவ்வாறு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். ஏனென்றால் ஆங்கிலத்தில் ஒரு ஒலிக்கு இரண்டு வகையான வரி வடிவங்கள் உள்ளன. சான்றாக 'ஏ' என்ற ஒலிக்கு 'A' , 'a' என்று இரண்டு வரிவடிவங்கள் உண்டு. இவற்றில் ஒரு வடிவத்தின் அடிப்படையில் பலன்களைக் கூறினால் தவறாகும். இரண்டு வடிவங்களின் அடிப்படையில் இருவிதமான பலன்களைக் கூறுவது அறிவின்மை ஆகும். எப்படிப் பார்த்தாலும் இரண்டு வரிவடிவங்களைக் கொண்ட ஆங்கில மொழியில் வரிவடிவ அடிப்படையில் ஒருவரது குணநலன்களைக் கூறுவது பொருந்தா ஒன்றாகும்.
நடைமுறைச் சிக்கல்கள்
தொகுமேற்கண்ட தவறுகள் மட்டுமின்றி, தமிழர்கள் இம்முறையினை பின்பற்றுவதில் கீழ்க்காணும் நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. தமிழ் எழுத்துக்கள் பலவற்றிற்கு சரியான ஆங்கில எழுத்துக்கள் இல்லை. சான்று: த்,ச்,ற்,ங்,ஞ்,ண்,ந்,ழ்,ள் ஆகியவற்றுக்கு சரியான ஒற்றை ஆங்கில எழுத்துக்கள் இல்லை. இந்த சிக்கல் இருப்பதால், தமிழ்ப் பெயர்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதி மதிப்பெண் வழங்குவதில் தவறு நேர்கிறது. சான்றாக, முத்துக்கமலம் என்ற தமிழ்ப் பெயருக்கு மதிப்பெண் காணலாம். முத்துக்கமலம் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது 'muthukamalam' என்று எழுதுகின்றனர். இது தவறாகும். ஏனென்றால் இந்த ஆங்கிலப் பெயரின் உண்மையான ஒலிப்பு 'முட்ஹுகமலம்' ஆகும். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணருங்கள். ஒலிப்பு தவறாகும் போது ஒலிகளின் மதிப்பும் தவறாகி பெயருக்கான மதிப்பெண் முழுக்க முழுக்க தவறாகி விடுகிறது. இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த போலியான ஒரு எண்கணித முறையினை நாம் இன்னமும் ஏன் பின்பற்ற வேண்டும்?. வாருங்கள், நமது பண்பாட்டிற்கு ஏற்ற தமிழ் எண்கணித முறையினைப் பற்றி காணலாம்.
தமிழ் எண்கணித முறை
தொகுஇந்த முறைப்படி, தமிழ் ஒலிகளுக்கு கீழ்க்காணும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- அ, ஆ, இ, ஈ, உ, ஊ - 3
- எ, ஏ, ஒ, ஓ - 7
- ஐ - 5
- க், ர், ங், ஹ், ஃ - 1
- ச், ஞ், ய், ஸ், ஷ், ஜ் - 7
- ட், ண், ள் - 4
- த், ழ், ந் - 8
- ப், வ், ம், எப் - 6
- ற், ல், ன் - 2
(* இரண்டு எழுத்துக்களால் எழுதப்படுவதால் 'ஔ' என்னும் எழுத்துக்கு மதிப்பெண் இல்லை. இதனை 'அவ்' என்று எழுதி மதிப்பிடலாம்.)
முத்துக்கமலம் = ம்+உ+த்+த்+உ+க்+க்+அ+ம்+அ+ல்+அ+ம் = 6+3+8+8+3+1+1+3+6+3+2+3+6=53=8
முத்துக்கமலம் தமிழ் வழியிலான பெயர் எண்=8
மேற்காணும் மதிப்பெண்களின் அடிப்படையில் வாரக்கோள்களின் தமிழ்ப் பெயர்களுக்கு கீழ்க்கண்டவாறு மதிப்பெண்கள் அமையும்.
- ஞாயிறு - ஞ்+ஆ+ய்+இ+ற்+உ - 7+3+7+3+2+3 = 25 = 7
- திங்கள் - த்+இ+ங்+க்+அ+ள் - 8+3+1+1+3+4 = 20 = 2
- செவ்வாய் - ச்+எ+வ்+வ்+ஆ+ய் - 7+7+6+6+3+7 = 36 = 9
- அறிவன் (புதனின் தமிழ்ப் பெயர்) - அ+ற்+இ+வ்+அ+ன் - 3+2+3+6+3+2 = 19 = 1
- அந்தணன் (வியாழனின் தமிழ்ப் பெயர்) - அ+ந்+த்+அ+ண்+அ+ன் - 3+8+8+3+4+3+2 = 31 = 4
- வெள்ளி - வ்+எ+ள்+ள்+இ - 6+7+4+4+3 = 24 = 6
- காரி (சனியின் தமிழ்ப் பெயர்) - க்+ஆ+ர்+இ - 1+3+1+3 = 8
ராகுவும் கேதுவும் நிழல் கோள்கள் என்பதால் அவற்றுக்கு வேறுமுறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இனி தமிழ் முறைப்படி,
- எண் 1 க்கு ஆட்சிக்கோள் 'புதன்' என்றும்
- எண் 2 க்கு ஆட்சிக்கோள் 'சந்திரன்' என்றும்
- எண் 3 க்கு ஆட்சிக்கோள் 'குரு' என்றும்
- எண் 4 க்கு ஆட்சிக்கோள் 'கேது' என்றும்
- எண் 5 க்கு ஆட்சிக்கோள் 'ராகு' என்றும்
- எண் 6 க்கு ஆட்சிக்கோள் 'சுக்கிரன்' என்றும்
- எண் 7 க்கு ஆட்சிக்கோள் 'சூரியன்' என்றும்
- எண் 8 க்கு ஆட்சிக்கோள் 'சனி' என்றும்
- எண் 9 க்கு ஆட்சிக்கோள் 'அங்காரகன்' என்றும் அறிக.
அடிப்படைகள்
தொகுதமிழ் எண்கணித முறையானது கீழ்க்காண்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ் ஒலிகளின் பிறப்பு முறைப்படி அவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- ஒரே இடத்தில் பிறக்கும் வல்லின,மெல்லின ஒலிகளுக்கு ஒரே மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. சான்று: (க்-ங்),(ச்-ஞ்) முதலானவை.
- இடையின ஒலிகளுக்கும் ஏவல் வினைகளில் அவற்றின் மாற்றாக வரும் வல்லின ஒலிகளுக்கும் ஒரே மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. சான்று: (வ்-ப்), (ழ்-த்), (ய்-ச்) முதலானவை.
- தமிழரின் காலமுறையான நாழிகைக் கணக்கினை இது அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.
ஆதாரங்கள்
தொகு- தமிழ் எண்கணித முறையானது கீழ்க்காண்பவற்றை ஆதாரங்களாகக் கொண்டுள்ள விண்வெளியின் பால் வீதி மண்டலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கோள்களின் இருப்பு நிலையினை இது முதன்மை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
- கோள்களின் பண்பிற்கும் எண்களுக்குமான தொடர்பினை இது துணை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
தமிழ் எண் கணித பலன்கள்
தொகுதமிழ் எண் கணித சோதிட முறைப்படி ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களும் அதற்கான பண்பு மற்றும் குணங்கள் எனும் பலன்கள் கணிக்கப்பட்ட