தமிழ் துணை எழுத்து
துணைக்கால் 18 மெய்எழுத்துக்களுடன் ஆ என்ற உயிரெழுத்து சேரும்போது தோன்றும் 18 உயிர்மெய் எழுத்துக்களுடன் துணைக்கால் இடம்பெறும். இத்துணை எழுத்து உயிர்மெய் எழுத்துக்களில் வலப்புறம் மட்டுமே சேரும்.
(எ .கா ) க் +ஆ = கா
க் என்ற மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்தாக மாறும்போது புள்ளி நீங்கிய வடிவம் (க ) பெறுகிறது. ஆ என்ற உயிரெழுத்து உயிர்மெய் எழுத்தாக மாறும்போது துணைக்கால் வடிவம் (ா) பெறுகிறது கா முதல் னா வரையுள்ள 18 எழுத்துக்களும் இவ்வாறே தோன்றுகின்றன.
க் +ஆ = கா ங் +ஆ = ஙா ச் +ஆ = சா ஞ் +ஆ = ஞா
ட் +ஆ = டா ண் +ஆ = ணா
த் +ஆ = தா ந் +ஆ = நா
ப்+ஆ = பா ம் +ஆ = மா
ய்+ஆ = யா ர் +ஆ = ரா
ல்+ஆ = லா வ் +ஆ = வா
ழ் +ஆ = ழா ள் +ஆ = ளா
ற் +ஆ = றா ன் +ஆ = னா
பார்வை நுால்கள்
தொகுநற்றமிழ் இலக்கணம்,டாக்டர் கோ. பரமசிவம், கவிக்குயில் பிரிண்டர்ஸ்,சென்னை,1975.