தமிழ் நாவலந்தண்பொழில்

நாவலந்தண்பொழில் என்பது தமிழ்மொழி வழங்கிய நிலத்தைக் குறிக்கும் தொடர்.

இதன் வடக்கு எல்லை குருகொடு பெயர்பெற்ற மால்வரை. குருகு என்பதைக் கிரவுஞ்சம் என வடமொழியாக்கம் செய்து இந்த மலையின் பெயரைக் கிரவுஞ்சமலை எனக் குறிப்பிடுகின்றனர். விந்திய-சாத்பூரா மலைகளையே இவை குறிக்கின்றன. இதனால் தமிழும் அதன் திரிசொல் மொழிகளும் பரிபாடல் காலம் வரையில் வடக்கில் விந்தியமலை வரையில் பேசப்பட்டுவந்தன என்பதைத் தெளிவாக உணரலாம்.

நாவலந்தண்பொழில், வடமொழி பேசும் நாடு ஆகிய இரண்டுக்கும் இடையே இந்த மலை இருந்த்தாம்.[1]

சங்கநூல்களில் வரும் இத்தொடரின் ஆட்சிகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.

நாவலந்தண்மொழில் மன்னர் ஏவல் கேட்ப (பாண்டியன் அரசாண்டான்)[2]
நாவலந்தண்பொழில் ஒற்றர்கள் வஞ்சியில் இருந்தனர் [3],
கிள்ளிவளவனுக்குப் பின்னர் ககந்தன் காகந்திக்கு (காவிரிப்பூம்பட்டினத்துக்கு) அரசனானபோது அவனுக்குப் பகையாயிருந்த நாவலந்தண்பொழில் மன்னர்கள் நடுங்கினர் [4]
மணிமேகலைக்கு ஒப்பார் தமிழகத்தில் இல்லை[5][6]
மாக்கடல் சூழ் நாவலந்தீவு ஆள்வார் [7]
நாவல் ஓங்கிய மாபெருந் தீவில் (புகார் நகரத்தில் இந்திரனுக்குத் தீவகச் சாந்தி விழா கொண்டாடினர் [8]

அடிக்குறிப்பு

தொகு
  1. மாய அவுணர் மருங்கு அறத் தபுத்தவேல், நாவலந்தண்பொழில் வடமொழி ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து, மலையாற்றுப்படுத்த மூவிரு கயந்தலை - பரிபாடல் 5-9
  2. சிலப்பதிகாரம் 17-1-3,
  3. சிலப்பதிகாரம் 25-173
  4. மணிமேகலை 22-29
  5. நாவலந்தீவில் நங்கையை (மணிமேகலையை) ஒப்பார் யாவரும் இல்லை மணிமேகலை 25-12,
  6. நாவலந்தீவில் தான் நனி மிக்கோள் - மணிமேகலை 28-180
  7. ஏலாதி 56-4
  8. மணிமேகலை 2-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_நாவலந்தண்பொழில்&oldid=940034" இலிருந்து மீள்விக்கப்பட்டது