தமிழ் பாரம்பரியப் பண்பாட்டு மையம்

தமிழர்கள் பயன்படுத்தி வந்த பல்வேறு தொழில் சார்ந்த பழங்காலப் பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்துக் காட்சிப்படுத்தும் நோக்கத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் பாரம்பரியப் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட இருக்கிறது. இம்மையத்தில் தமிழர் பாரம்பரியப் பொருட்கள், தொழில் முறைக் கருவிகள், உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தி வந்த பொருட்கள் போன்றவை சேகரித்து வைக்கப்பட உள்ளன. இம்மையம் அமைப்பதற்காக, மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள பழைய கட்டிடம் ஒன்றில் தற்போது மண் பானைகள், நெல் வைக்கப் பயன்படும் குளுமை, துருத்தி, மரத்திலான சோறு வடிகட்டி, மீன் பிடிக்கும் பத்தக்கட்டை, மீன் வலைகள், மரக்கலப்பை, களைக் கொத்தி, கூட்டு மாட்டுவண்டி, மூங்கில் இடுக்கி, விவசாயத்துக்குத் தண்ணீர் இறைக்கும் கமலை, சால், உரிகள், வெண்கலக் கும்பா, தயிர் மத்து, துடுப்பு, உணவு பொருட்களைப் பதப்படுத்தும் பீங்கான் பாத்திரம், அரிவாள், வாள், பல்லாங்குழி, தோல், கைவினைப் பொருட்கள் தயாரிப்புக் கருவிகள், மண் குதிரைகள், இளவட்டக்கல், ஓலைச்சுவடிகள் போன்றவை சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

வெளி இணைப்புகள்

தொகு

தமிழர் கலாச்சாரத்தை மீட்டெடுக்க பாரம்பரிய பொருட்களுடன் காமராசர் பல்கலைக்கழகத்தில் பண்பாட்டு மையம் - இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி.