தமிழ் மொழிபெயர்ப்பியல்
தமிழ் மொழிபெயர்ப்பியல் என்பது மொழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு, தன்மொழியாக்கம் தொடர்பான கோட்பாடு, விபரிப்பு, பயன்பாடுகளைப் பற்றி பொதுவாகவும், தமிழ் மொழியுடனும் சூழலுடனும் தொடர்புபடுத்தி சிறப்பாகவும் ஆயும் துறை ஆகும். மொழிபெயர்ப்பியல் தொடர்பான ஆய்வும் செயற்பாடுகளும் தொல்காப்பியர் காலம் தொடங்கி தற்காலம் வரை தமிழ்ச் சூழலில் நடந்துவருகின்றன.[1] இத் துறை தொடர்பான பயிற்சியினை தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியன வழங்குகின்றன.