தமிழ் மொழியில் உள்ள சில சொற்கள் காலப்போக்கில் பேச்சு வழக்கில் பொருள் திரிந்து எழுத்துக்கள் திரிந்து உள்ளன. அவற்றின் தொகுப்பு.
காலப்போக்கில் பேச்சு வழக்கில் பொருள் திரிந்த தமிழ்ச் சொற்கள்
தொகு
சொல் |
தற்கால பேச்சு வழக்கில் உள்ள பொருள் |
உண்மையானப் பொருள்
|
நெஞ்சு |
மார்பு |
நெஞ்சாங்குலை, இதயம், இருதயம்
|
தண்ணீர் |
நீர்(Water) |
குளிர்ந்த நீர்(தண்மை+நீர்)
|
நெய் |
பசும்பால் நெய்(Ghee) |
உராய்வு இல்லாமல் இருப்பது. நெய்>நேய்(முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்). நெய்யின் தன்மை கொண்டது நேய்(நேயம்). Oil.
|
எண்ணெய் |
அனைத்து நெய்யையும்(Oil) சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்(Oil). எள்+நெய்=எண்ணெய்.
|
சமணம் |
ஜைனம்(Jainism) |
ஆசீவகம், ஜைனம், சாவகம் ஆகிய நெறிகளைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல்[1][2]
|
எழுத்துக்கள் திரிந்த தமிழ்ச் சொற்கள்
தொகு
திரிந்தச் சொல் |
உண்மையானச் சொல்
|
பைத்தியம் |
பித்தியம்
|
பேச்சு வழக்கில் திரிந்த ஊர்ப்பெயர்கள்
தொகு
தற்காலத்தில் வழங்கப்படும் ஊரின் பெயர் |
உண்மையான பெயர் |
வழங்கப்பட்ட காலம்
|
திருச்சிராப்பள்ளி/த்ரிச்சி(Trichinopoly) |
திருச்சிலாப்பள்ளி |
|
கரூர் |
கருவூர் |
சங்ககாலம்
|
ராம்நாட்(Ramnad) |
இராமநாதபுரம் |
|
டேன்ஜோர்(Tanjore) |
தஞ்சாவூர், தஞ்சை |
|
சிதம்பரம் |
சிற்றம்பலம் |
|
ஈரோடு |
ஈரோடை |
|
அண்ணமங்கலம் |
அண்ணல் மங்கலம் |
|
பழனி மலை |
பொதினி மலை |
சங்ககாலம்
|
ஸ்ரீரங்கம் |
திருவரங்கம்(திரு+அரங்கம்) |
|
திருவான்மியூர் |
திருவாமையூர் |
|
காட்பாடி(Katpadi) |
காட்டுப்பாடி |
|
காவேரி ஆறு |
காவிரி ஆறு |
சங்ககாலம்
|
கர்நாடகா |
கருநாடகம்(கரு+நாடு+அகம்) |
|
பெங்களூர்(Banglore) |
வெங்காலூர் |
சங்ககாலம்
|
பெல்லந்தூர் |
வெல்லந்தூர் |
|
மைசூர்(Mysore) |
எருமையூர்(மையூர்) |
சங்ககாலம்
|
- ↑ சாவகர் அருகர் சமணர் ஆகும்;
ஆசீ வகரும் அத்தவத் தோரே
- திவாகர நிகண்டு
- ↑ சாவகர் அருகர் சமணர் அமணர்
ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே
- ஐயர் வகை, பிங்கல நிகண்டு