தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம்

தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் என்பது "மொழிபெயர்ப்பாளர்களுடைய பணி, பங்களிப்பு குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்குதல்", மொழிபெயர்ப்பாளர்களின் நலன்களைப் பேணுதல் முதலிய நோக்கங்களோடு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒர் அமைப்பு ஆகும்.[1] இது 2004/2005 காலப் பகுதியில் நிறுவப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகின்றது. மொழிபெயர்ப்பியல் பற்றிய நூல்களை வெளியிடல், மொழிபெயர்ப்பு, நூற்பட்டியல்களை உருவாக்கல், பயிலரங்குகளை நடத்தல், தமிழின் மூத்த மொழிபெயர்ப்பாளர்களைக் கௌரவித்தல் ஆகிய இதன் செயற்பாடுகளில் அடங்கும்.

இந்த அமைப்பில் கோச்சடை, ஆர்.சிவகுமார், மயிலை பாலு, அமரந்த்தா, தியாகு உட்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் முனைப்பாக அங்கம் வகித்து வந்துள்ளார்கள்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன: தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்
  2. "தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் - மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.