தமிழ் வழக்கு (டென்மார்க்)
தமிழ் வழக்கு (டானிசு: Tamilsagen) என்பது டென்மார்க்கில் தமிழ் குடும்பங்கள் மீள் இணைவது தொடர்பான ஒரு வழக்கு ஆகும். இந்த வழக்கு 1993 ஆம் ஆண்டு Poul Schlüter தலைமையிலான அரசு ஆட்சி இழக்கக் காரணமாக அமைந்தது.
வழக்கு
தொகு1987 ஆம் ஆண்டு தமிழ் குடும்ப இணைவுகளை குறைக்கும் வழிகளை அரசு ஆய்ந்தது. அதனைத் தொடர்ந்து நீதி அமைச்சர் Erik Ninn-Hanse தமிழ் குடும்பங்கள் மீள் இணைவதைத் தடுக்கும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொண்டார். இவை டானிசு சட்டத்துக்கு எதிரானவை என்று முடிவாகியது. இந்த வழக்கு ஊடகங்களில் பரந்த கவனிப்பைப் பெற்றது. அரசியல் நோக்கில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து Erik Ninn-Hansen 1989 ஆம் ஆண்டு பதவி விலகினார். நான்கு நீதி அமைச்சு ஊழியர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது, அமைச்சர் impeach செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அரசு ஆட்சி இழந்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Thi kendes for ret. Dokument. Rigsrettens dom over forhenværende justitsminister Erik Ninn- Hansen afsagt 22. juni 1995. Weekendavisen, 23.06.1995, 1._sektion, Side 3