தமிழ் விசன்

தமிழ் விசன் என்பது கனடா நாட்டில் இருந்து 'தமிழ் விசன் இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கனேடியத் தமிழர்களுக்கான 24 மணி நேரம் ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை செப்டம்பர் 7, 2001 ஆம் ஆண்டு முதல் தொராண்டோ மற்றும் ஒன்றாரியோவை தலைமையகமாகக் கொண்டு, வட அமெரிக்காவின் மிகப்பெரிய தமிழ் ஊடகமாக இயங்கி வருகிறது. தமிழ் விசன் உயர் வரையறு தொலைக்காட்சியை சனவரி 14, 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்ப தொடங்கியது.

தமிழ் விசன்
ஒளிபரப்பு தொடக்கம் 7 செப்டம்பர் 2001
உரிமையாளர் தமிழ் விசன் இன்டர்நேஷனல்
நாடு கனடா
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் கனடா
தலைமையகம் தொராண்டோ, ஒன்றாரியோ
வலைத்தளம் Tamil Vision

இந்த அலைவரிசையில் குடும்ப நாடகங்கள், நகைச்சுவைகள், நடனம் மற்றும் பட்டு போட்டி நிகழ்ச்சிகள், அரசியல், உடல்நலம் மற்றும் திரைப்படங்கள் பற்றிய நிகழ்ச்சிகள், பிரபலங்களை நேர்காணல், செய்தி அறிவிப்புகள் போன்ற பல வகை நிகழ்ச்சிகளை தயாரித்து மற்றும் பிற ஊடகங்களிடம் இருந்து வாங்கி ஒளிபரப்பு செய்து வருகிறது.

வரலாறு

தொகு

தமிழ் விசன் இன்டர்நேஷனல (தமிழ் விசன்) என்பது செப்டம்பர் 7, 2001 ஆம் ஆண்டு முதல் கனடாவில் இருந்து வகை பி சிறப்பு தமிழ் மொழி பிரிவின் கீழ் இயங்குகின்றது. இது வட அமெரிக்காவின் மிகப்பெரிய தமிழ் ஊடகம் ஆகும். பின்னர் செப்டம்பர் 17, 2012 ஆம் ஆண்டு முதல் உரிமம் பெற்ற வகை பிசிறப்பு சேவையிலிருந்து விலகி, மூன்றாம் மொழி சேவையின் கீழ் ஒளிபரப்பி வருகின்றது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "ARCHIVED - Tamil Vision channel – Revocation of licence". Canadian Radio-television and Telecommunications Commission (CRTC). September 17, 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_விசன்&oldid=3308773" இலிருந்து மீள்விக்கப்பட்டது