தமிழ் வைத்திய விசாரணி

மருத்துவ சஞ்சிகை

தமிழ் வைத்திய விசாரணி என்னும் சஞ்சிகை நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் 1898 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது. இதில் மேலைநாட்டு, கீழைநாட்டு வைத்திய முறைகளை ஒப்பிட்டு கட்டுரைகள் வெளிவந்தன. இறந்தவரை எரிப்பதில் உள்ள சுகாதாரச் சிறப்பு, புதைப்பதில் உள்ள கேடு, கன்மக் கொள்கை, விபத்துக்கள் போன்றவை பற்றி எழுதினார்.