தம்தரி மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம்


இந்திய மாநிலமான சட்டீஸ்கரில் தம்தரி மாவட்டம் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் தம்தரி நகரில் அமைந்துள்ளது.

தம்தரி மாவட்டம்
धमतरी जिला
தம்தரிமாவட்டத்தின் இடஅமைவு சட்டீஸ்கர்
மாநிலம்சட்டீஸ்கர், இந்தியா
தலைமையகம்தம்தரி
பரப்பு4,084 km2 (1,577 sq mi)
மக்கட்தொகை799781 (2011)
படிப்பறிவு75.16%
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

புவிப்பரப்பு

தொகு

இந்த மாவட்டத்தில் மகாநதி பாய்கிறது. இந்த ஆற்றின் நீர்வளத்தையும், துணை ஆறுகளின் நீர்வளத்தைப் பயன்படுத்தியும் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.

பொருளாதாரம்

தொகு

இங்கு 136 அரிசி அரவை ஆலைகள் இயங்குகின்றன. [1]

ரவிசங்கர் சாகர் அணையில் இருந்து பெறும் நீரை குடி நீராகப் பயன்படுத்துகின்றனர். அதைக் கொண்டு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நிலப்பரப்பில் 52 சதவிகிதப் பகுதிகள் காட்டுப் பகுதியாக உள்ளன. [2]

மக்கள் தொகை

தொகு

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது 7,99,781 மக்கள் வாழ்ந்தனர். [3]சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 236 பேர் வாழ்கின்றனர். [3] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [3] இங்கு வாழ்பவர்களில் 78.95% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3]

சான்றுகள்

தொகு
  1. "Dhamtari Government Website". பார்க்கப்பட்ட நாள் 2006-09-22.
  2. "Dhamtari District NCCR". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2006-09-22.
  3. 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்தரி_மாவட்டம்&oldid=3557091" இலிருந்து மீள்விக்கப்பட்டது