தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில்
தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில், யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் மாத்தளை மாவட்டம் தம்புள்ளை நகரப் பிரதேசத்தில் அமைந்து இருந்தது. [1] இது கடந்த 30 ஆண்டுகளில், இப்பிரதேசத்தில் காணப்பட்ட ஒரே இந்து ஆலயம் ஆகும்.[2]
இக்கோயிலில் ஏற்கனவே பல முறைதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. [1] [2] [3][4] இக்கோயிலுக்குப் பாதுகாப்பு வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். சுவாமிநாதன் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.[1] [2] [3] [4]
ஆலயத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு பௌத்த விகாரையின் பிரதம பிக்குவினால் ஆலய பரிபாலகர்களுக்கு அழுத்தங்களும் நெருக்குதல்களும் கொடுக்கப்பட்டது,[1] அதன்பின்னர் தொடர்தாக்குதலும் நடத்தப்பட்டு, இக்கோயில் அக்டோபர் 28, 2013-ம் நாள் இடிக்கப்பட்டுள்ளது.[1] [2]
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்'
- ↑ 2.0 2.1 2.2 2.3 "தம்புள்ள காளி கோயில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-30.
- ↑ 3.0 3.1 "தம்புள்ள பத்திரகாளி கோயிலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க சுவாமிநாதன் எம்.பி. கோரிக்கை". Archived from the original on 2013-10-25. பார்க்கப்பட்ட நாள் 2013-10-30.
- ↑ 4.0 4.1 "தம்புள்ள பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்". Archived from the original on 2016-03-14. பார்க்கப்பட்ட நாள் 2013-10-30.