தயோகீட்டீன்கள்

தயோகீட்டீன்கள் (Thioketenes) என்பவை R2C=C=S என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமகந்தகச் சேர்மங்களாகும். இங்குள்ள R என்பது ஆல்க்கைல் அல்லது அரைல் தொகுதியைக் குறிக்கும். தயோகீட்டீன் சேர்மங்கள் கீட்டீன்களை ஒத்த சேர்மங்களாகும். தயோகீட்டீன் என்பதும் CH2=C=S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு சேர்மமாகும். எத்தின்தயோன் என்ற இச்சேர்மமே மிக எளிய தயோகீட்டோன் சேர்மமுமாகும். தயோகீட்டீன்கள் வினைத்திறன் மிக்கவையாக உள்ளன. பலபடிகளாக உருவாகும் தன்மையைக் கொண்டுள்ளன. 1,2,3-தயாடையசோல்களை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தி நிலையற்ற வேதிச்சேர்மங்களாக சில தயோகீட்டீன்கள் தயாரிக்கப்படுகின்றன [1].

தயோகீட்டீன்களின் பொதுக் கட்டமைப்பு வாய்ப்பாடு

பிசு(முப்புளோரோமெத்தில்)தயோகீட்டீன் ((CF3)2C=C=S) என்ற சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்ட தயோகீட்டீனுக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டாகும் [2]. S=C=C=C=S என்ற வாய்ப்பாடு கொண்ட கார்பன் துணைசல்பைடு மற்றொரு நிலைப்புத்தன்மை கொண்ட தயோகீட்டீன் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Otto-Albrecht Neuman (Editor). Rompps Encyclopedia of Chemistry, Frank'sche Publishing House, Stuttgart, 1983, 8. Edition, p. 4242, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-440-04513-7.
  2. Raasch, Maynard S. (1970). "Bis(trifluoromethyl)thioketene. I. Synthesis and cycloaddition reactions". J. Org. Chem. 35: 3470–3483. doi:10.1021/jo00835a064. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோகீட்டீன்கள்&oldid=2749807" இலிருந்து மீள்விக்கப்பட்டது