தயோயீனால்கள்

தயோயீனால்கள் (Thioenols) என்பவை இரட்டைப் பிணைப்பைக் கொண்டுள்ள கார்பன் அணுக்களுடன் ஒரு தயோல் குழு இணைக்கப்பட்டிருக்கும் ஆல்கீனைக் குறிக்கும். இவற்றை ஆல்கீன்தையால்கள் என்ற பெயராலும் அழைக்கலாம். ஈனால்களின் கந்தக ஒப்புமை சேர்மங்கள் என்று இவை கருதப்படுகின்றன. ஆல்கீனின் இரட்டைப்பிணைப்பில் பங்கு கொண்டுள்ள இரண்டு அணுக்களுடனும் தயோல் குழு இணைந்திருந்தால் அவற்றை ஈனிருதயோல்கள் என்பர். தயோயீனாலின் புரோட்டான்நீக்க எதிர்மின் அயனிகள் தயோயீனோலேட்டுகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.

தயோயீனால்கள்

இத்தகைய கட்டமைப்புகள் இயங்குச் சமநிலை மாற்றியத்தை வெளிப்படுத்தி கார்பனைல் கட்டமைப்பின் கீட்டோ-ஈனால் இயங்கு சமநிலையின் ஒப்புமைகளான தயோகீட்டோன்கள் அல்லது தயோவால்டிகைடுகளைக் கொடுக்கின்றன. [1]

மேற்கோள்கள்

தொகு
  1. Chiang, Yvonne; Kresge, A. Jerry; Schepp, Norman P.; Popik, Vladimir V.; Rappoport, Zvi; Selzer, Tzvia (1998). "The acid dissociation constant of triphenylethenethiol, a simple thioenol, and that of its oxygen–enol analog". Canadian Journal of Chemistry 76 (6): 657–661. doi:10.1139/v98-027. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1998-06_76_6/page/657. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோயீனால்கள்&oldid=3521124" இலிருந்து மீள்விக்கப்பட்டது