தரவு மையம் என்பது தரவு பரிமாற்றத்தின் மையமாகும். இது தரவு அறிவியல், தரவு பொறியியல், தரவு கிடங்கு தொழில்நுட்பங்களால் வழிபடுத்தப்படுகிறது , இது பயன்பாடுகள், வழிமுறைகள் போன்ற இறுதிப் புள்ளிகளுடன் தொடர்பு கொள்கிறது.

கூறுபாடுகள் தொகு

ஒரு தரவு மையம் ஒரு தரவுக் கிடங்கிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் அது பொதுவாக ஒருங்கிணைக்கப்படாததும் பெரும்பாலும் வெவ்வேறு வகைகளில் இருக்கும். தரவுக் கிடங்கு வகைகளும் ஆகும். இது ஒரு செயல்பாட்டு தரவுக் கிடங்கிலிருந்து வேறுபடுகிறது , ஏனெனில் ஒரு தரவு மையம் செயல்பாட்டுத் தரவுகளுக்கு மட்டும் வரம்புப்படுத்தப்பட வேண்டியதில்லை.

ஒரு தரவு மையம் தரவை ஒரே இடத்தில் தேக்குவதற்குப் பதிலாக , பல விரும்பத்தக்க படிவங்களில் தரவை வழங்குகிறது. மேலும் இது தரவுகளுக்கு நகலெடுத்தலைத் தவிர்த்தல், தரத்தையும் பாதுகாப்பையும் வழங்கல், இன்னும் வினவுவதற்கான செந்தர முறைகளையும் சேர்ப்பதால் தரவு ஏரியிலிருந்து வேறுபடுகிறது. தரவு ஏரி தரவை ஒரே இடத்தில் தேக்கி வைப்பதற்கும் , தரவை செயலாக்க அல்லது அதற்கு மதிப்பைச் சேர்க்க நுகர்வோரை விடுவதற்கும் மட்டும் உதவுகிறது.

தரவு மையங்கள் ஒரு நிறுவனத்திற்குள் சரியான தரவுகளுக்குச் செல்ல சிறந்த இடமாகும். இதனால் அழைப்பாளர்களுக்கும் தரவு வழங்குபவர்களுக்கும் இடையிலான பல புள்ளி க்கு - புள்ளி இணைப்புகள் செய்யப்பட வேண்டியதில்லை. இதனால் தரவு மைய அமைப்பு வழங்கல்கள், அட்டவணைகளுக்காக பல்வேறு தரவக அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். பல்வேறு தரவக அணிகள் பலவற்றிலிருந்து புதிய சேவைகள், கூறுபாடுகளைப் பெற முயலும்போது, அவையும் பல்வேறு அணிகளில் இருந்து அவற்றைப்பெறுவதால், அனைவருக்கும் வழங்கும் ஒரு இலவசமான நிறுவனமாக அமைய முடியாது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவகம்&oldid=3804871" இலிருந்து மீள்விக்கப்பட்டது