தராமைரா எண்ணெய்

 தராமைரா எண்ணெய் (ஆங்கில மொழி: Taramira oil) அல்லது ஜம்பா எண்ணெய்  என்பது அருகுலா என்றவொரு விதையிலிருந்து உருவாக்கப்படும் எண்ணெய் ஆகும். வரட்சிப் பகுதிகளில் விளையும் பயிர் என்பதால் மழைப்பொழிவு குறைவான மேற்கு ஆசியா, பாக்கிஸ்தான், வட இந்தியா போன்ற பகுதிகளில் இது பிரபலம். இந்த எண்ணெய் மிகவும் காரமாகவும், உறைப்பாகவும் இருக்கும். கடுகு எண்ணெய்க்கு மாற்றாகப் பயன்படுத்தினாலும் அதைவிட காரத்தன்மை மாறுபட்டுயிருக்கும். இந்தியாவில் ஊறுகாய் தயாரிப்பதற்கு, பழையதாகி காரம் குறைந்த பின்னர் பழக்கலவை அல்லது சமையலுக்குப் பயன்படுகிறது. இந்த எண்ணெய் தோலை மென்மையாக்குவதால் உருவு எண்ணெயாகவும் பயன்படுகிறது. எண்ணெய் தயாரிப்பு உருவாகும் துணைப் பொருளான இதன் சக்கை கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Das, Srinabas; Kumar Tyagi; Harjit Kaur (2004). "Evaluation of taramira oil-cake and reduction of its glucosinolate content by different treatments". Indian journal of animal sciences 73 (6): 687–691. http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=14981811. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தராமைரா_எண்ணெய்&oldid=2747916" இலிருந்து மீள்விக்கப்பட்டது