தரையடிரெயில்

தரையடிரெயில் (Underground Railway) : போக்குவரத்து அதிகமாக உள்ள நகரங்களில் பூமிக்கு அடியில் சாலைகளையும் ரெயில் பாதைகளையும் அமைக்கிறார்கள்.தரையடி ரெயில் பாதைகளை இரண்டு விதமாக அமைக்கலாம். சாலைகளை வெட்டிப் பள்ளத்தில ரெயில் பாதையை அமைப்பது ஒரு முறை. ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் பூமியைக் குடைந்துகொண்டே சென்று குடைவு வழி (த.க.) அமைத்து பாதை அமைப்பது மற்றொரு முறை. ஆறுகளுக்கு அடியிலும் தரையடி ரெயில்பாதைகளை அமைப்பதுண்டு. தரையடி ரெயில்பாதைகளை அமைக்கும்போது நல்ல காற்றோட்டம் இருக்குமாறு செய்யவேண்டும்; கெட்ட காற் றைக் வெளியேற்றவும், தூய காற்றை உள்ளே கொண்டு வரவும் வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

உலகில் முதல் தரையடி ரெயில் பாதை 1863-ல் லண்டன் நகரில் அமைக்கப்பட்டது. இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, தென் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களிலும், சோவியத் ரஷ்யாவில் மாஸ்கோ, லெனின்கிராடு நகரங்களிலும், ஜப்பானில் டோக்கியோவிலும், இந்தியாவில் கல்கத்தாவிலும் தரையடி ரெயில்பாதைகள் உள்ளன. நியூயார்க் நகரிலுள்ள தரையடி ரெயில்பாதை உலகிலேயே மிகப் பெரியதாகும், பார்க்க: குடைவு வழி; சுரங்கம்.

[1]

  1. https://en.wikipedia.org/wiki/Rapid_transit
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரையடிரெயில்&oldid=3482845" இலிருந்து மீள்விக்கப்பட்டது