தரை ஓடுகள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தரைப் பரப்புகளை நீண்ட காலம் உழைக்கத்தக்கவையாக ஆக்குவதற்குப் பல வகை ஓடுகளைப் பதிக்கிறார்கள். இவற்றை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மெருகு ஓடுகள் (Vitrified Tiles) வனை ஓடுகள் (Ceramic Tiles)
மெருகு ஓடுகள் கண்ணாடி போன்ற பளபளப்பைக் கொண்டவை. களிமண், சிலிகா, குவார்ட்சு,ஃபெல்ட்ஸ்பார் ஆகிய பொருட்களைக் கொண்ட கலவையைப் பயன்படுத்தி மெருகு ஓடுகள் தயாரிக்கப்படுகின்றன.[1][2][3]
இத்தகைய கலவைப் பொருட்கள் காரணமாக, அதிக வெப்பத்தில் உருக்கப்படும்போது, கண்ணாடி போன்ற படிமம் உருவாகிறது. இது மெருகு ஓடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் இடம் பிடிக்கிறது. மெருகு ஓடுகளில் நுண்துளைகள் இருப்பதில்லை. தீயினால் சுடப்படுவதற்கு முன்பாகவே, கலவையில் வண்ணச் சாயங்களைச் சேர்க்கிறார்கள். இதன் காரணமாக இந்த ஓடுகளின் நிறம் எல்லாப் பகுதிகளிலும் ஒரே சீராக அமைந்திருக்கும். எனவே இந்த வகை ஓடுகளின் ஒரு பகுதி சிதைவடைய நேரிட்டாலும் வண்ணம் மாறுவது கிடையாது.
வனை ஓடுகள் களிமண்ணை முக்கிய மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. அச்சில் இடப்பட்டு, தேவைப்படும் வடிவில் ஓடுகளைச் சுட்டு எடுக்கிறார்கள். அதற்குப் பிறகே இந்த ஓடுகளுக்கு மேற்பூச்சுக் கொடுக்கிறார்கள்.
வனை ஓடுகளில் சிதைவு ஏற்பட்டால் மேற்பூச்சு இழக்கப்படும். நிறம் மாறும். சிதைவுற்ற பகுதி தனியாகத் தோற்றம் அளிக்கும். இது ஒரு குறையாகக் கருதப்படும்.
இதைத் தவிர்ப்பதற்காகவே வனை ஓடுகளைக் காட்டிலும் மெருகு ஓடுகளை விரும்புகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 'World Production And Consumption Of Ceramic Tiles.' Ceramic World Review no. 138. Pg. 40
- ↑ "Ceramic Tile History". Traditional Building. 2020-09-15 இம் மூலத்தில் இருந்து 15 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210415073644/https://www.traditionalbuilding.com/product-report/ceramic-tile-history. பார்த்த நாள்: 2021-03-29.
- ↑ Indian History (in ஆங்கிலம்). Tata McGraw-Hill Education. 1926. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781259063237.
kalibangan tiles.