தர்பார் மகால்

பகவல்பூர் நகரில் அமைந்துள்ள ஓர் அரண்மனை

தர்பார் மகால் (Darbar Mahal) பாக்கித்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ள பகவல்பூர் நகரில் அமைந்துள்ள ஓர் அரண்மனை ஆகும் [1]. இந்த அரண்மனையை ஐந்தாம் பகவல் கான் தன்னுடைய மனைவிக்காகக் கட்டினார் [2]. 1905 ஆம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு முதல் இந்த அரண்மனை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கட்டிடம் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. "Darbar Mahal keeps 'Princely State' alive". Archived from the original on 2018-12-31. பார்க்கப்பட்ட நாள் 2018-08-26.
  2. "A century later, Bahawalpur's Darbar Mahal stands tall - The Express Tribune". 21 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பார்_மகால்&oldid=3557325" இலிருந்து மீள்விக்கப்பட்டது