தர்மதீர்த்தர்
சுவாமி தர்ம தீர்த்தர் (1892-1976) நாராயண குருவின் சீடர்களில் ஒருவர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்.
வாழ்க்கை
தொகுஇவர்து இயற்பெயர் பி.பரமேஸ்வர மேனன். 1892ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். வழக்கறிஞர் படிப்பை முடித்தபின் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கையில் நாராயணகுருவைப் பற்றி கேள்விப்பட்டார். சிவகிரியில் நாராயணகுருவை சந்தித்து மாணவரானார். பின்னர் நாராயணாகுருவிடம் காஷாயம் வாங்கி தர்ம தீர்த்தர் என்ற பேருடன் துறவியானார். 1976ல் திருவனந்தபுரத்தில் இறந்தார்.
பணிகள்
தொகுசுவாமி தர்மதீர்த்தர் நாராயணகுரு உருவாக்கிய துறவிகள் அமைப்பான நாராயண தர்மசங்கத்தின் சட்ட வரைவை உருவாக்கினார். அவரது The Prophet of Peace என்ற பெரிய நூல் நாராயணகுருவை ஆங்கிலம் வழியாக அறிமுகம் செய்த முதல் பெரும் படைப்பாகும். திருவனந்தபுரம் பகுதியில் தாழ்த்தப்பட்டோர் நடுவே கல்விப்பணியாற்றினார்