தர வட்டம்
தர வட்டம் (Quality Circle) என்பது ஒரு இடத்தில் ஒரே மாதிரியான பணியைச் செய்யும் சில பணியாளர்கள் தாமாகவே முன்வந்து வாரத்தில் ஒரு நாள் கூடி தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களைக் கண்டறிந்து,ஆராய்ந்து தீர்க்கும் வழிமுறைகளைக் காணும் அமைப்பு ஆகும்.
தரத்தை உயர்த்த
தொகுஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சப்பான் நாடு அது உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முழுத்தர மேலாண்மை என்ற கோட்பாட்டின் ஒரு அங்கமாக தர வட்டம் விளங்குகிறது.
மன மகிழ்ச்சி
தொகுபணியாளர்கள் தாம் பணி செய்யும் இடத்தில் மன மகிழ்ச்சியோடு இருந்தால் பொருட்களின் தரமும் சரியாக இருக்கும் என்பதே இதன் அடிப்படை ஆகும்.
குறைகூறாத பண்பு
தொகுதாமாகவே முன்வருதல்,ஒன்றுகூடி பணி செய்தல், தவறுக்கு யார் காரணம் என்று நோக்காமல், எது காரணம் என்று ஆராயும் குறைகூறாத பண்பு, சுயநலத்தை நீக்கி பொது நலனில் அக்கறை கொண்ட சொந்த உணர்வு ஆகியவற்றை மனிதரில் வளர்ப்பதின் மூலம் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கலாம்.
மேம்பட்ட சமுதாயம்
தொகுமேம்பட்ட சமுதாயம் மேம்பட்ட பணியாளர்களை உருவாக்கும். மேம்பட்ட பணியாளர்கள் மேம்பட்ட தரமான பொருட்களை உருவாக்குவார்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது தர வட்டம்.