தற்காலிக மரபணு வெளிப்படுதல்
தற்காலிக மரபணு வெளிப்படுதல் (transient gene expression) என்பது மூலக்கூற்று உயிரியலில் பயன்படும் ஒரு சொல். ஒரு மரபணுவை செயற்கையாக சில நாட்களுக்கு மட்டும் வெளிப்படுத்தும் செயலே தற்காலிக மரபணு வெளிப்படுதல். மரபணுவை பயிர் அல்லது விலங்கு உயிரணுக்களில் நிலையாக நிறப்புரியில் சேர்ந்து நிலைத்த வெளிப்பாடு செய்வதும் உண்டு.பயிர் இலைகளிலோ (leaves) அல்லது விலங்கு உயிரணுக்களிலோ (cells) உள்-செலுத்தப்படும் மரபணுக்கள் அதனை சுற்றி உள்ள கலங்களின் நிறப்புரியில் (chromosome) இணையும் தன்மையைக் கொண்டு இருக்கும். ஒரே உயிரணுவில் உள்ள நிறப்புரியில் பல இடங்களில் இவை இணைவதால், இவற்றின் நகல் எண்ணிக்கை பலவாக(copy number) இருக்கும். இதனால் புரத வெளிப்பாடு மிகைப்படுத்தப்பட்டு அதன் அளவு கூடுதலாக இருப்பதற்கு வாய்ப்புகள் கூட்டப்படுகின்றன.
தற்காலிக வெளிப்படுதலில் (transient expression) ஒரு மரபணு வெளிப்படும் தன்மை முதல் மூன்று நாட்களில் உச்ச அளவிலும் பின் குறைந்து ஏழாம் நாளில் வெளிப்பாடு நின்றும் விடும். ஏனெனில் பயிர் மற்றும் விலங்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அல்லது பாதுகாப்பு அரண்கள், செயற்கை முறையில் உள்-செலுத்தப்படும் மரபணுவை ஒரு அயல் பொருளாக கருதி அவற்றை மரபணு ஒடுக்குதல் (gene silencing) என்னும் நிகழ்வுக்கு உட்படுத்தி தடுத்துவிடும். இந் நிகழ்வை பயிரில் மரபணு ஒடுக்குதல் (post-transcriptional gene silencing) என்றும், விலங்குகளில் ஆர்.என்.ஏ குறுக்கீடுகள் (RNA interference) என்றும், பூஞ்சையில் கொல்லுதுதல் (quelling) என்றும் சுட்டப்பெறும்.
தற்காலிக மரபணுவை வெளிப்படுத்தும் நுட்பம்.
- ௧. அக்ரோ- செலுத்துதல் (Agroinfiltration) (பயிர்களின் இலையில்)
- ௨. மாற்றப்பட்ட தீ நுண்மங்கள் மூலமாக (பயிர்களிலும் மற்றும் விலங்கு)
- ௩.உள்-செலுத்துதல்(transfection) (விலங்கு உயிரணுக்களில்)
நிலையான மரபணு வெளிப்படுத்தலுக்கு பல நுட்பங்கள் பயிர் மற்றும் விலங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை,
- ௧. அக்ரோபக்டேரியம் உருமாற்றம்-Agrobacterium plant transformation (பயிர்களில்)
- ௨.துகள் தாக்கும் முறை- particle bombardment
- ௩. நுண் செலுத்துதல்- micro-injection
இவ்வாறு மரபணு மாற்றப்பட்ட உயிர்களால் பலவித கவலைகளும் குற்றசாட்டுகளும் சொல்லப்படுகின்றன. குமுகவியல் ஆர்வலர்கள் தெரிவிக்கும் கவலைகளை தீர்ப்பதற்கு பல வகையான நுட்பங்களும் வந்து கொண்டு இருக்கின்றன (எ.கா. தேர்தெடுக்கும் முகவர் இல்லாத பயிர்கள், marker free plants). மிகப்பெரிய பின்னடைவு என்பது தீ நுண்ம எதிர்ப்பு பயிர்கள். இவற்றை மீண்டும் தாக்கும் நுண்மங்கள் படிப்படியாக பயிரின் நோய் எதிர்ப்பு தன்மையை உடைத்து பெரிய அளவில் அறுவடைக்கு இழப்பை ஏற்படுத்த வல்லன.