தற்கொலைத் தாக்குதல்

"தற்கொடைத் தாக்குதல்" தன்னை தானே விருப்புடன் சாவைத் தழுவி மேற்கொள்ளும் துணிகரத் தாக்குதலை குறிக்கும். தமிழில் தற்கொலைத் தாக்கதல் என்றும் இதைக் குறிப்பர். குறிப்பாக தற்கொலையை மேற்கொள்ளும் பிரிவு தற்கொடை என்றும் அதன் எதிர்ப் பிரிவு தற்கொலை என்றும் குறிப்பர். தற்கொடைத் தாக்குதலை மேற்கொள்ளும் ஒருவரை தற்கொடையாளி அல்லது தற்கொலையாளி என்று அழைப்படுகிறார்கள்.

மே மாதம் 1945-ம் ஆண்டு யு.எஸ்.எஸ் பங்கர் பகுதியில் எற்பட்ட தாக்குதல்

ஜப்பானிய கமிகசே தொகு

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் யப்பான் அடுக்கடுக்காக பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இதை தடுப்பதற்காக கமிகசே (யப்பானியம்:神風 [kamikazɛ] கமி - கடவுள், கசே - காற்று) எனப்பட்ட யப்பானிய பேரரசின் வானோடிகள் தமது வெடிகுண்டு நிரம்பிய தமது வானூர்திகளால் நேச நாட்டுக் கப்பல்களை குறிவைத்து தற்கொடைத் தாக்குதல்கள் நிகழ்த்தினார்கள். இதுவே தற்காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தற்கொடைத் தாக்குதலின் முதல் வரலாறு.

விடுதலைப் புலிகளில் தற்கொடைப் போராளிகள் தொகு

1987 யூலை 5 ம் நாள் நெல்லியடியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த, கரும்புலிகள் அணியின் கப்டன் மில்லர் என்பவரால் இலங்கை இராணுவப் படை முகாம் மீது வெடிமருந்துகள் நிரப்பிய வாகனத்தை மோதி நடாத்தப்பட்ட தாக்குதலையும், அது போன்ற கரும்புலி அணியினரினரால் தற்கொடையாளியாய் சென்று மேற்கொள்ளும் தாக்குதல்களையும் "தற்கொடைத் தாக்குதல்" என ஒரு தாக்குதலுக்கான சொல்லாக (குறிப்பாக புலிகளின் ஊடகங்களில்) இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது.

பலஸ்தீனிய போரளிகளின் தற்கொடைத் தாக்குதல்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்கொலைத்_தாக்குதல்&oldid=2411964" இலிருந்து மீள்விக்கப்பட்டது