தலாசரி தாலுகா
தலாசரி தாலுகா (Talasari taluka)இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 46 வருவாய் கிராமங்களைக் கொண்டது.[2]இத்தாலுகாவின் 90% மக்கள் பட்டியல் பழங்குடியினர் ஆவார்.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 27,942 வீடுகள் கொண்ட இத்தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,54,818 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 76,417 மற்றும் பெண்கள் 78,401 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,026 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 26733 - 17% ஆகும். சராசரி எழுத்தறிவு 57.2% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 2,043 மற்றும் 1,40,273 ஆகவுள்ளனர். 100% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 96.85%), இசுலாமியர்கள் 1.44%, கிறித்துவர்கள் 0.86% மற்றும் பிறர் 0.86% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[3]