தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தி

தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தி (Overhead projector) என்பது பார்வையாளர்கள் அல்லது கற்போருக்கு படங்களைப் பெரிதாக்கி காட்சிப்படுத்துவதற்கு வசதியான ஒரு கருவியாகும். இது நழுவ வீழ்த்தியின் மாறுபட்ட வடிவம் ஆகும்.[1][2][3]

வகுப்பறையில் பாடம் கற்பித்தலின் போது செயல்பாட்டில் உள்ள தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தி

பயன்படுத்தும் முறை தொகு

ஒளி ஊடுருவக் கூடிய அசிடேட் பிளாஸ்டிக் அட்டையில் எழுதுவதற்கு என அமைந்த எழுதுகோலால் அழிக்க முடியாத மைப்பேனாவைக் கொண்டோ அல்லது நீா்ம எழுத்துப் பேனாவைக் கொண்டோ பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதோ எழுதி திரையில் வீழ்த்தலாம்.

கருவியின் பயன்கள் தொகு

  1. பயன்படுத்துபவர் பார்வையாளர்களை பாா்த்துக் கொண்டே எழுதவும், விளக்கிக் காட்டவும் முடியும்.
  2. இக்கருவியைப் பயன்படுத்தும் போது அறையை இருட்டாக்கத் தேவை இல்லை.
  3. படத்தைக் கருவியின் மேடை மீது வைத்து முக்கிய பகுதிகளை கைவிரலைக் கொண்டோ அல்லது பென்சிலின் முனையைக் கொண்டோ குறிப்பிட்டுத் திரையில் காணுமாறு செய்யலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. Power, Stephen. "'The pedagogic perfection of the overhead projector – and why interactive whiteboards alone won't ever match it'". பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.
  2. Kavita, GU; Shashikala, P; Sreevidyalata, GM (2015). "Use of Over Head Projector for teaching and learning Fine Needle Aspiration Cytology skills to undergraduate students and their perception". Journal of Educational Research & Medical Teacher 3 (1): 31–33. http://jermt.org/wp-content/uploads/2015/11/10.pdf. 
  3. "Overhead projector Definition & Meaning". www.britannica.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-17.