தலைக்கோல் என்பது அரசன் கையில் வைத்திருக்கும் செங்கோல் போன்றதொரு கோல். சிலப்பதிகாரக் காலத்துச் சோழ வேந்தன் இதனை ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய மாதவிக்கு வழங்கிச் சிறப்பு செய்தான். [1] [2] இதனை வழங்கியவன் கரிகாலன் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

தலைக்கோல்

இந்திரன் மகன் சயந்தன். இவன் அகத்தியர் சாபத்தால் மூங்கிலாக மாறினான். சோழன் அதனை வெட்டித் 'தலைக்கோல்' செய்துகொண்ட பின்னர் சாபத்திலிருந்து விடுதலை பெற்றான். [3]

அடிக்குறிப்பு

தொகு
  1.  காவல் வெண்குடை மன்னவன் கோயில்
    இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
    வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் 120
    (அரங்கேற்றுக் காதை)

  2. நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
    காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
    இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத் 160
    தலைக்கோல் எய்தி
    (அரங்கேற்றுக் காதை)

  3. இவன் வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைக்கோல்&oldid=3726910" இலிருந்து மீள்விக்கப்பட்டது