தலைஞாயிறு அம்பலவாணர் கோயில்
தலைஞாயிறு அம்பலவாணர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலங்குடிக்குக் கிழக்கே 5 கிமீ தொலைவில் தலைஞாயிறுக்கு அடுத்து ஓரடி அம்பலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
தொகுஇங்குள்ள மூலவர் அம்பலவணேசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி சிவகாமசுந்தரி. கோயிலின் தீர்த்தம் சிவகங்கைத் தீர்த்தமாகும். இக்கோயிலின் தல மரமாக அரச மரம் உள்ளது.[1]
பெயர்க்காரணம்
தொகுஇறைவன் தன் அடியவருக்காக சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தை இங்கே காட்டினார். ஆதலால் இவ்வூர் ஓரடி அம்பலம் என்றழைக்கப்படுகிறது. சிவராத்திரியும், நடராஜர் அபிஷேகம் சிறப்பாக இக்கோயிலில் நடைபெறுகின்றன.[1]