பாய்க்கப்பல் ஒன்றின் தலைப்பாய் என்பது, முன் பாய்மரத்துக்கு முன் பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கும் எந்தப் பாயையும் குறிக்கும்.[1] மிகப் பொதுவான தலைப்பாய்கள், கயிறு தாங்கு பாய்கள் (staysails) ஆகும். கயிறு தாங்கும் பாய் என்பது முக்கோணப்பாய், செனோவாப்பாய் ஆகியவற்றை உள்ளடக்கியது. பிற தலைப்பாய்கள் எந்தவொரு முன்தலைப்பு வடத்துடனும் தொடர்பின்றி தனியாகப் பொருத்தப்பட்டிருக்கும்.

தலைப்பாய்கள் அல்லது முக்கோணப் பாய்களாக நான்கு வடந்தாங்கு பாய்களுடன் கூடிய கலியாசு அல்பானசு: (இடமிருந்து வலம்) flying jib, வெளி மற்றும் உள் முக்கோணப்பாய், வடந்தாங்குபாய்

சில தலைப்பாய்கள் கப்பல் செலுத்தும் குறிப்பிட்ட வேளைகளில் மட்டுமே விரிக்கப்படும். இசுப்பின்னாக்கர் வகைத் தலைப்பாய்கள் காற்றின் திசையில் செல்லும்போது பயன்படுத்தப்படும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைப்பாய்&oldid=3910725" இலிருந்து மீள்விக்கப்பட்டது