தலைப்பிரட்டை

தலைப்பிரட்டை அல்லது வாற்பேய் (இலங்கை) (Tadpole) என்பது ஈரூடகவாழ்விகளான தவளைகளின் குடம்பி(Larva) நிலையாகும். இது நீரில் மட்டுமே வாழக் கூடிய நிலையாகும். இந்நிலையில் இது பார்க்க மீன் குஞ்சு போல இருக்கும். கால்கள் ஏதும் இருக்காது. சுவாசம் செவுள்கள் மூலம் மட்டும் நடைபெறும். மெல்ல மெல்ல கால்கள் வளரத் தொடங்கும் போது நுரையீரலும் உருவாக இருவாழ்வி நிலையை எட்டும்.

காஸ்வெல் தவளையின் தலைப்பிரட்டை பருவம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைப்பிரட்டை&oldid=2220484" இலிருந்து மீள்விக்கப்பட்டது