தலைவரும் பணியாளரும் உவமை

தலைவரும் பணியாளரும் உவமை என்பது இயேசுவின் உவமைகளுள் ஒன்றாகும். புதிய ஏற்பாட்டில் லூக்கா 17:7-10இல் இவ்வுவமை இடம் பெறுகின்றது. ஒருவர் கடவுளின் விறுப்பத்தை பலன் எதிர்பார்காமல் நிறைவேற்ற வேண்டும் என இது எடுத்துரைக்கின்றது.[1]

உவமையின் விவரிப்பு தொகு

லூக்கா நற்செய்தியில் இவ்வுவமை பின்வருமாறு உள்ளது:

' உங்கள் பணியாளர் உழுது விட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ' நீர் உடனே வந்து உணவருந்த அமரும் ' என்று உங்களில் எவராவது சொல்வாரா? மாறாக, ' எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம் ' என்று சொல்வாரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ' நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம் ' எனச் சொல்லுங்கள். '

லூக்கா 17:7-10, பொது மொழிபெயர்ப்பு

மேற்கோள்கள் தொகு

  1. Arland J. Hultgren, The Parables of Jesus: A Commentary, Eerdmans Publishing, 2002, ISBN 0-8028-6077-X, p. 251.