தளகதிர் படம்

தளகதிர் படவியல் (Tomography) என்பது ஒரு தளத்திலுள்ள உடலுறுப்புகளை தெளிவாக அதன் குறுக்கு வெட்டுத் தோற்றமாகக் காணத்துணை செய்யும் ஒரு புதுமையான கருவியாகும். கணினியின் துணையுடன் செயல் படுவதால் இது கணினிதுணையுடனான கதிர்படம் (Computer assisted tomogramm ) என அறியப்பட்டது.இன்று எளிமையாக கணினி தளகதிர்படம் என அறியப்படுகிறது.உடலினைக் குறுக்காக சிறு துண்டாக வெட்டினால் எவ்வாறு இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு துண்டின் படமாகும். பாசிட்ரான் உமிழ்வு தளக்கதிர் படமும் Positron emission tomogramm ) காந்த ஒத்ததிர்வு படமும் ( Magnetic resonance image) கூட தளகதிர் படங்களே.

தளகதிர் படத் தோற்றமும் இருபரிமாணப் படத்தோற்றமும் (P)

பொதுவாக முப்பரிமாணத்தில் உள்ள உறுப்புகளை இரு பரிமாணத்தில் எக்சு கதிர் படமாகப் பெறும்போது, வெவ்வேறு உறுப்புகளின் படிமங்கள் ஒன்றன் மேல் ஒன்று விழுவதால் படம் தெளிவில்லாமல் போய்விடுகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, உடலில் ஒரு தளத்தில் இருக்கும் உறுப்பை மட்டும் தெளிவாக படம் எடுக்கும் முறை தளகதிர் படவியல் (Tomography) என்றும், படம் தளகதிர் படம் (Tomogram) அழைக்கப்படுகிறது. இப்பொழுது இம்முறையைப் பயன்படுத்தும் கணினியுடன் செயல்படும் கருவிகள் (CT) உள்ளன. மேலும் காந்த ஒத்ததிர்வு படமுறை (Magnetic Resonance Imaging), மீயொலி (Ultrasound), பாசிட்ரான் உமிழ்வு தளபடமுறை (Positron emission tomography-PET), ஒற்றை ஒளியன் உமிழ்வு தளபடமுறை (Single photon emission tomography-SPECT ) என்று பல கருவிகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தளகதிர்_படம்&oldid=3035742" இலிருந்து மீள்விக்கப்பட்டது