தளபதி மாளிகை, கொழும்பு

தளபதி மாளிகை (General's House, Colombo) என்பது இலங்கையின், கொழும்பில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தளபதியின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.

தளபதி மாளிகை
தளபதி மாளிகை, கொழும்பு is located in Greater Colombo
தளபதி மாளிகை, கொழும்பு
முந்திய பெயர்கள்Captain's House
பொதுவான தகவல்கள்
முகவரிபௌத்தலோக மாவத்தை (புல்லர்ஸ் வீதி)
நகரம்கொழும்பு
நாடுஇலங்கை
கட்டுவித்தவர்இலங்கை தரைப்படை

வரலாறு

தொகு

பிரித்தானிய இலங்கையின் காலனித்துவ அரசாங்கம் புல்லர்ஸ் சாலையில் அரசு அதிகாரிகள் தங்குவதற்காக பல "அ" வகுப்பு வகை குடியிருப்புகளைக் கட்டியது. இந்த வீடுகள் ஒரு பெரிய அறை, சாப்பாட்டு அறை, அலுவலக அறை, நான்கு பெரிய படுக்கையறைகள் கொண்டதாக இருந்தன. இந்தக் குடியிருப்பானது இணைப்பு வீடுகளாக, ஒருவீட்டிலிருந்து ஒருவீட்டுக்கு ஒலி கடந்து செல்வதைத் தடுக்க ஒரு வெற்று சுவரால் பிரிக்கப்படவையாக கட்டபட்டன. அறைகள் காற்றோட்டமானவையாக அமைக்கபட்டன. ஒவ்வொரு வீட்டிற்கும் மின் விளக்குகள், மின்விசிறிகள், நவீன சுகாதாரக் கட்டமைப்புகள், குடிநீர் இணைப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டன. இந்த வீடுகளில் ஒன்று கொழும்பில் உள்ள மூத்த பிரித்தானிய கடற்படை அதிகாரியால் பயன்படுத்தப்பட்டது. எனவே இது "கேப்டன் மாளிகை" என்று அழைக்கப்பட்டது. 19 ஜூன் 1947 தேதியிட்ட ஒரு கடிதத்தின்படி, வேளாண் மற்றும் நிலங்கள் அமைச்சகம் தற்காலிகமாக கேப்டன் மாளிகை என்று அழைக்கப்பட்ட குடியிருப்பை அப்போதைய சிலோன் தானைவைப்பு படைத் தளபதியிடம் தற்காலிகமாக ஒப்படைத்தது.

1949 இல் இலங்கை இராணுவத்தின் முதலாவது தளபதியாக பிரிகேடியர் ஜேம்ஸ் ரோடெரிக் சின்க்ளேர், கெய்த்னஸின் ஏர்ல், நியமிக்கப்பட்டார். அவர் 1952 வரை தன்னார்வ இலங்கை பாதுகாப்புப் படையிலிருந்து மரபார்ந்த இராணுவமாக நிறுவுவதில் பெரும் பங்கு வகித்தார். அவரும் அவரது மனைவி கேப்ரியல், கவுண்டஸ் ஆஃப் கெய்த்னஸ் மற்றும் அவர்களது குழந்தைகளான லேடி பிரிட்ஜெட், லேடி மார்கரெட், மால்கம் ஆகியோர் புல்லர்ஸ் சாலையில் உள்ள "கேப்டன் மாளிகையில்" குடியேறினர்.

பின்னர் மேஜர் ஜெனரல் ரிச்சர்ட் உடுகம புல்லர்ஸ் வீதியில் (இப்போது பௌத்தலோக மாவத்தை) இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பெயரை "கேப்டன் மாளிகை" என்பதை "ஜெனரல் மாளிகை" என்று மாற்ற முடிவு செய்தார். 1955 இல் பிரிகேடியர் சர் பிரான்சிஸ் ரீட் இப்பகுதியிலிருந்து சென்றதற்கும் 1956 சனவரியில் பிரிகேடியர் முத்துக்குமாரு வந்ததற்கும் இடையில் சட்டமா அதிபர் (அட்டர்னி ஜெனரல்) இங்கு தங்கியிருந்தார். கெய்த்னஸ் ஏர்ல் காலத்திலிருந்து, இது இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக மாறியது.

காவல்

தொகு

பகல் நேரத்தில் தளபதி கொழும்பில் இருக்கும் போது வீட்டின் வாயில்களில் சடங்குக்கு ஒரு காவலர் நிறுத்தப்பட்டிருப்பார். அந்தக் காவலரானவர் பாரம்பரியமாக தளபதியின் சொந்தப் படையணியிலிருந்து வருவிக்கப்படுபவராக இருப்பார்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளபதி_மாளிகை,_கொழும்பு&oldid=3961642" இலிருந்து மீள்விக்கப்பட்டது