தளர்வு நுட்பம்

தளர்வு நுட்பம் (relaxation technique) அல்லது தளர்வுப் பயிற்சி (relaxation training) என்பது ஒரு முறை, நிகழ்வு, செயல்முறை அல்லது செயல்பாடு ஒரு நபர் ஓய்வெடுக்கவோ அமைதி நிலையை அடைவதற்கோ உதவுகிறது; அல்லது வலி, கவலை,மன அழுத்தம் அல்லது கோபத்தின் அளவுகளை குறைக்கப் பயன்படுகிறது. ஓய்வெடுத்தல் உத்திகள் பெரும்பாலும் ஒரு பரந்த மன அழுத்த மேலாண்மையின் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன, இதனால் தசை இறுக்கம் குறைக்கப்படலாம், மேலும் குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மெதுவான இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் போன்றவையும் பிற சுகாதார நலன்களுக்கிடையில் ஏற்படலாம்.[1]

மக்கள் அதிகமாக, மனச்சோர்வடையும் பொழுது பல்வேறு வழிகளில்மன அழுத்தத்தை எதிர் கொள்கின்றனர். யோகா, குய்கோங், தைஜி மற்றும் பிராணயாமம் உள்ளிட்ட ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன,உடல் நலத்தை மேம்படுத்தி மனம் அமைதியடைய வழிவகுக்கின்றன. சில வழிகளில் மனச்சோர்வையும், மற்றவர்களால் அதீத மன எழுச்சிக்கும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும் நபர்கள்,  அதிக கவனம் செலுத்தி,  யோகா நுட்பங்களையும் நடைபயிற்சியையும் மேற்கொள்வது சிறந்தது.

பின்னணி

தொகு

மன அழுத்தத்தை நீக்குதல் அல்லது எதிர்கொள்வதன் மூலம் ஒரு நபரின் உடல்நலத்தை அதிகரிக்கலாம்  என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.[2]

1980 களில் வெளியிடப்பட்ட ஆய்வு , முன்னர் அறியப்பட்ட தளர்வு நுட்பங்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக பெறப்படும் பயன்களை விட மன அழுத்தத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இடையில் உள்ள வலுவான உறவுகளையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஆராய்ச்சி 1986 ல் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை உட்பட பல்வேறு தேசிய ஊடகங்களின் கவனத்தை பெற்றது.

பயன்கள்

தொகு

மக்கள் பின்வரும் காரணங்களுக்காக தளர்வு நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்:

நுட்பங்கள்

தொகு

தனிநபர்கள் தங்கள் தளர்வு நிலையை மேம்படுத்த  பல்வேறு உத்திகளை  பயன்படுத்துகின்றனர். சில முறைகளை தனியாக மெற்கொள்ளலாம்; பிற முறைகளுக்கு  மற்றொரு நபரின் உதவி தேவைப்படுகிறது (பெரும்பாலும் பயிற்சி பெற்ற தொழில் வல்லுநர்); சிலமுறைகள் இயக்கத்தையும் சில தொடர்ந்த நிலைத்த தன்மையையும் உள்ளடக்கியுள்ளன,  மற்ற முறைகள் வெவ்வேறு கூறுகளை உள்ளடக்கியுள்ளன.

"முறையான மற்றும் செயலற்ற தளர்வு பயிற்சிகள்" எனப்படும் சில தளர்வு நுட்பங்கள் பொதுவாக அமைதியாக உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில்  குறைவான இயக்கத்துடன் செய்யும் போதும் மீள்நிலைக்கு திரும்பும் போதும் மேற்கொள்ளப்படுகின்றன. அவை பின்வருமாறு:

  • சுயமான பயிற்சி
  •  உயிரி பின்னூட்டம்
  • ஆழமான சுவாசம்
  •  தியானம் 
  • மன, உடல் தளர்வு
  •  பிராணயாமம்
  •  முற்போக்கான தசை தளர்வு
  •  கிகாங் 
  • ஷினெங் கிகாங்
  •  சுய ஹிப்னாஸிஸ்
  •  ஆழ்ந்த தியான நுட்பம்
  •  காட்சிப்படுத்தல் 
  •  யோக நித்ரா 
  • ஜென் யோகா

நடைபயிற்சி, தோட்டக்கலை, யோகா, தாய் சி, கிகாங் மற்றும் பல பயிற்சிகள் இயக்கம் சார்ந்த அடிப்படையிலான தளர்வு நுட்பங்களை உள்ளடக்கியது. சில வகை உடல் சார்ந்த வேலைகள் தளர்வு நுட்பத்தை ஊக்குவிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக உடற்பிடிப்பு, குத்தூசி மருத்துவம், ஃபெல்டன்கிராஸ் முறை, தசை சிகிச்சை, தானியங்கி ரீதியான மருத்துவம் மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவை  இதனுள் அடங்கும்.

சில ஓய்வு முறைகள் மற்ற நடவடிக்கைகளின் போதும் பயன்படுத்தப்படலாம், எடுத்துக்காட்டாக, தன்னியக்க நிர்வாகம் மற்றும் பிரார்த்தனை. சில வகையான இசை, குறிப்பாக புதிய கால இசை மற்றும் பாரம்பரிய இசையைக் கேட்பது போன்றவை அமைதி மற்றும் எளிதில் தளர்வாக உணர்வது போன்ற தொடர்புடைய உணர்வுகளை அதிகரிக்கலாம் என்று குறைந்த பட்சமாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

புகழ் பெற்று வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம் மிதவை சிகிச்சை ஆகும், இது மிதக்கும் தொட்டியின் பயன்படும் தத்துவமாகும், இதில் எளிதில் மிதக்க உதவும் வகையில் தோல் வெப்பநிலையில் வைக்கப்படும் எப்சம் உப்புக் கரைசல் பயன்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் சக்தி வாய்ந்த மற்றும் ஆழ்ந்த தளர்வு நிலையை இருபது நிமிடங்களுக்குப் பிறகு பெறும் ஒரு செயல்விளக்கத்தை நிகழ்த்தியுள்ளது. சில சந்தர்ப்பங்களில், மிதத்தல் வலி மற்றும் மன அழுத்தத்தை குறைத்து எண்டோர்பின் வெளியீட்டிற்கு வழிவகுக்கிறது.

பூங்காவில் நடத்தல் போன்ற எளிய நடவடிக்கைகள் கூட காரணத்தை பொருட்படுத்தாமல், தளர்வு உணர்வுகளுக்கு உதவி செய்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Goleman, Daniel (May 13, 1986). "Relaxation: Surprising benefits detected". த நியூயார்க் டைம்ஸ். https://query.nytimes.com/gst/fullpage.html?sec=health&res=9A0DE5D81E3AF930A25756C0A960948260#. பார்த்த நாள்: May 23, 2006. 
  2. Mayo Clinic Staff (July 21, 2012). "Exercise and stress: Get moving to combat stress". mayoclinic.com. Mayo Foundation for Medical Education and Research.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளர்வு_நுட்பம்&oldid=4062598" இலிருந்து மீள்விக்கப்பட்டது