தழும்பன்
தழும்பன் ஊணூர் மன்னன். அவன் உடம்பில் விழுப்புண் தழும்புகள் மிகுதி. யாழிசைப் பாணர்களின் உறவினனாகவும், தலைவனாகவும் விளங்கியவன்.[1]
இவன் ‘பிடிமிதி வழுதுணைத் தழும்பன்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளான். பெண்யானை ஒன்று இவனை மிதித்ததால் மூட்டு வழுவி வழு உண்டாகிப் பின் நலம் பெற்ற தழும்பும் அவன் உடம்பில் இருந்தது.[2]
இவன் வாய்மொழித் தழும்பன் எனவும் போற்றப்படுகிறான். இதனால் இவன் சொன்ன சொல் தவறாதவன் எனத் தெரிகிறது.[3]