தவளை விளையாட்டு
தவளை விளையாட்டுசிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.
தவளையினைப் போல தாவித் தாவி செல்லுதலை இவ் விளையாட்டில் ஆடுமுறையாகக் கொண்டதால் தவளை விளையாட்டாக அழைக்கப்படுகிறது. கையினை கால்களுக்கு இடையே கையினையூன்றித் தாவித்தாவி நகர்தல் வேண்டும். 'பட்டவர்' தொடுவற்காக விரட்டி வர மற்றவர் பிடிபடாமல் நகர்ந்து போய் குறி்ப்பிட்ட எல்லையை தொட்டு விட வேண்டும். இதில் சிறுவர் பலர் தவளை போல் தத்திச் செல்லவேண்டும். காலை மடக்கி உட்கார்ந்து, காலை நீட்டித் தத்துவதால் சிறந்த உடற்பயிற்சி.ஒருவர் பட்டவர். அவர் தத்திச் சென்று தொடுவதற்கு முன்பு மற்றவர் உத்திக்கோட்டைத் தொடவேண்டும். யாரையாவது தொட்டுவிட்டால் அவர் பட்டவர். யாரையும் தொடாவிட்டால் மீண்டும் அவரே 3 முறை பட்டவர். [1]
மேலும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
மேற்கோள்
தொகு- ↑ இரா பாலசுப்பிரமணியம் எழுதிய தமிழர் நாட்டு விளையாட்டுகள் என்ற புத்தகத்திலிருந்து எழுதப்பட்டது. பதிப்பகம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினரால் 1981ல் சனவரியில் நடைபெற்ற 5 வது உலகத் தமிழ் மாநாட்டையொட்டி வெளியிடப்பட்டது. பக்க எண்: 192