தவ்ஹீது

(தவ்ஹீத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தவ்ஹீத் (அரபி: توحيد tawḥīd;) என்பது இசுலாமிய சமயத்தின் ஓரிறைக் கொள்கையைக் குறிக்கும் அரபு மொழிச்சொல் ஆகும்.[1] கடவுள் ஒருவரே, அவர் ஈடு இணையற்றவர் ஓரிறைக் கொள்கையே இசுலாமியத்தின் அடிப்படை விழுமியம்.[2] கடவுளுக்கு இணை வைப்பதும், உருவ வழிபாடு செய்வதும் பாவம் என்பதும் தவ்ஹீத் கொள்கையின் அடிப்படையில் உருவானவை.

தவ்ஹீத் கொள்கையை முன்னிறுத்தி எழுந்த பல இசுலாமிய இயக்கங்கள், இந்தியாவில் உள்ள பல இசுலாமியர்கள் ஆஜ்மீர் தர்கா, நாகூர் தர்கா போன்ற தர்காக்களுக்குச் செல்லும் வழக்கம் உடையவராகவும் சந்தனக் கூடு போன்ற விழாக்களை நடத்தும் பழக்கம் உடையோராகவும் இருப்பது தவ்ஹீத் கொள்கையின் படி தவறு என்று எதிர்க்கின்றனர். ஜாமியத்துல் குர்ஆன் வல் ஹதீஸ், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், அஹ்லே ஹதீஸ் மற்றும் ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஆகிய அமைப்புகள் இவற்றில் அடங்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. From the article on Tawhid in Oxford Islamic Studies Online
  2. "Allah". Encyclopædia Britannica Online. அணுகப்பட்டது 2008-05-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவ்ஹீது&oldid=2604086" இலிருந்து மீள்விக்கப்பட்டது