தாக்குதல் (பிணையப் பாதுகாப்பு)
ஒருவர் மற்றவர்க்கு அனுப்பும் செய்தி பாதுகாப்பற்றதாக இருந்தால் அது தாக்கப்படலாம். தாக்குதல் என்பது செய்தியில் மாற்றம், செய்தியை ஒட்டுகேட்டல் போன்றவற்றைக் குறிக்கிறது. இத்தகைய தாக்குதல் இருவகைப்படும்.
- நேரடித் தாக்குதல் (active attack)
- மறைமுகத் தாக்குதல் (passive attack)
நேரடித் தாக்குதலில், அனுப்பப்பட்ட செய்தியில் பாதிப்பு ஏற்படக்கூடும். மறைமுகத் தாக்குதலில், செய்தியில் பாதிப்பு ஏற்படாது. மாறாக, செய்தியை மற்றொருவர் கண்காணிக்கக்கூடும். மறைமுகத் தாக்குதலை அறிந்துகொள்வது கடினம். ஏனென்றால், இத்தாக்குதலின்போது செய்தியில் மாற்றம் ஏற்படாது.
இத்தகைய தாக்குதல்களில் இருந்து செய்திகளை பாதுகாப்புடன் அனுப்ப வெவ்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன. செய்தியை குறிமுறையாக்கம் (encryption) செய்து அனுப்புவதும் இவற்றுள் ஒன்று.