தாங்கின் பேரரசர் தைசோங்

தாங்கின் பேரரசர் தைசோங் (28 சனவரி 598 - 10 சூலை 649) என்பவர் சீனாவின் தாங் அரசமரபின் இரண்டாவது பேரரசர் ஆவார். இவர் முன்னர் சின் இளவரசர் என்றும், இயற்பெயராக லீ சிமின் என்ற பெயரையும் பெற்றிருந்தார். இவர் 626 முதல் 649 வரை ஆட்சி செய்தார். 617ஆம் ஆண்டு சின்யாங் என்ற இடத்தில் சுயி அரசமரபுக்கு எதிராக தனது தந்தை லீ யுவானை கிளர்ச்சிக்கு ஊக்குவித்ததில் இவரது பங்கின் காரணமாக இவர் பொதுவாக தாங் அரசமரபின் துணை தோற்றுவிப்பாளராகக் கருதப்படுகிறார். தாங் அரசமரபுக்கு எதிரான மிகுந்த ஆபத்தான எதிரிகள் பலரை தோற்கடிப்பதிலும், சீனா முழுவதும் அரச மரபின் ஆட்சியை நிலைப்படுத்துவதிலும் தைசோங் இறுதியாக ஒரு முக்கிய பங்காற்றினார்.[1][a]

குறிப்புகள்

தொகு
  1. His status as co-founder on par with Gaozu appeared certain by the time the Southern Tang, which claimed inheritance of Tang heritage, was established, as its founding emperor Emperor Liezu (Li Bian) recognized that status by treating Emperors Gaozu and Taizong, as well as his adoptive father Xu Wen, all as founders of his state.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்கின்_பேரரசர்_தைசோங்&oldid=3790144" இலிருந்து மீள்விக்கப்பட்டது