தாஜ் அருங்காட்சியகம், ஆக்ரா

தாஜ் அருங்காட்சியகம் (Taj Museum), இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின், ஆக்ரா நகரத்தில், தாஜ் மகால் வளாகத்தின் மேற்கில் உள்ள ஜல் மஹால் கட்டிடத்தின் தரைத்தளத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் 1982 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

தாஜ் அருங்காட்சியகம் மூன்று கலைக்கூடங்களைக் கொண்டது. இக்கலைக் கூடங்களில் 121 தொல்பொருட்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். முகலாயர் காலத்திய சிறு ஓவியங்கள், கையெழுத்துப் படிகள், அரசக் கட்டளைகள், சித்திர மொழிகளின் வகைபடிவங்கள், போர்க் கருவிகள், பாத்திரங்கள், தாஜ் மகாலின் கட்டிட வரைபடங்கள், ஓவியங்கள், பளிங்குத் தூண்கள் முதலியன் தாஜ் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தின் நடு முற்றத்தில், யானையின் தந்தத்திலான ஷாஜகான் மற்றும் மும்தாசு ஆகியோரின் சிற்பங்களும், ஓவியங்களும் மற்றும் ஆக்ரா கோட்டையின் படிமங்களும் உள்ளது.

பிர்தௌசி எழுதிய ஷா நாமா நூலில் உள்ள ஓவியங்களும், 1612 இல் ஷாஜகான் கையொப்பமிட்ட அரச முத்திரையும் இவ்வருங்காட்சியகத்தில் உள்ளது.[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Taj Museum, Taj Mahal". Archived from the original on 2012-01-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-27.

வெளி இணைப்புகள் தொகு