பிரேமினி சபாரத்தினம்

(தாட்சாயணி(பிரேமினி ) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாட்சாயணி என்ற புனைபெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பிரேமினி சபாரத்தினம் ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதியவைகள், பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றிருக்கிறார்.

பிரேமினி சபாரத்தினம்
பிறப்புசாவகச்சேரி
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்வியாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

தாட்சாயணி இலங்கையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி ஆவார். பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர்.

எழுத்துலக வாழ்வு

தொகு

இவர் ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். இவரது கவிதை ஒன்று 1993இல் சுபமங்களா வெளியிட்ட இலங்கைச் சிறப்பிதழில் பிரசுரமாகி பலரது கவனத்தையும் பெற்றது.

வெளிவந்த நூல்கள்

தொகு
  • ஒரு மரணமும் சில மனிதர்களும்- சிறுகதைத் தொகுப்பு - ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை - (2004),ஞானம் விருது பெற்றது.
  • இளவேனில் மீண்டும் வரும் - சிறுகதைத் தொகுப்பு - மீரா பதிப்பகம் (2007)
  • தூரப் போகும் நாரைகள் - சிறுகதைத் தொகுப்பு
  • கடவுளோடு பேசுதல் - சில ஆன்மீகக் குறிப்புகள் - உரை நடை - மீரா பதிப்பகம் (2009)
  • அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - சிறுகதைத் தொகுப்பு - மீரா பதிப்பகம் (2011)

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமினி_சபாரத்தினம்&oldid=3095793" இலிருந்து மீள்விக்கப்பட்டது