தாணுலிங்கேசுவரர் கோயில்

தாணுலிங்கேசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலுக்கு தெற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தெங்கம்புதூர் என்ற ஊரில் உள்ளது. இவ்வூரில் சொக்கநாதர் கோயிலும் காசிவிஸ்வநாதர் கோயிலும் அமைந்துள்ளன.[1] இவ்வூர் பெருமாள் கோயில் சிறப்புற்று விளங்குகிறது. மதுசூதனப் பெருமாள் ஆலயம் மிகவும் பிரபலமானது. கருடனுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படும் தலமாகும். சித்திரை மாதம் 10ஆம் நாள் சூரிய ஒளி மூலவரின் பாதங்களில் படுகிறது. பங்குனி மாதத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது.

தாணுலிங்கேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
கோயில் தகவல்கள்
மூலவர்:தாணுலிங்கேசுவரர்

மேற்கோள்கள்

தொகு
  1. "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-01.