தாண்டலேட்டு

தாண்டலேட்டு (Tantalate) என்பது தாண்டலம் அணுவைக் கொண்டிருக்கும் ஒரு எதிர் மின்னயனி அல்லது அத்தகைய அயனியாலான ஓர் உப்பாகும். எழுபுளோரோடாண்ட்டனேட்டு (TaF72−)மற்றும் இதனுடைய பொட்டாசியம் உப்பு (K2TaF7) என்ற இரண்டு சேர்மங்களும் வணிகரீதியாக முக்கியத்துவம் பெற்றவையாகும்.

பொட்டாசியம் எழுபுளோரோடாண்ட்டனேட்டு

டாண்ட்டலத்தின் பல ஆக்சைடுகள் டாண்ட்டலேட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை டாண்ட்டலிக் அமிலத்தின் வழிப்பொருட்கள் என்றும் Ta2O5·nH2O [1] அல்லது HTaO3[2]) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கருத்தியலான வேதிச் சேர்மங்கள் என்பதாகவும் பார்க்கப்படுகின்றன. இலித்தியம் டாண்ட்டலேட்டு (LuTaO4) , லியுதேத்தியம் டாண்ட்டலேட்டு (LuTaO4) மற்றும் ஈயயிசுக்காண்டியம் டாண்ட்டலேட்டு (PST அல்லது Pb(ScxTa1-x)O3 என்பவை மேற்கண்ட வகைக்கு சில உதாரணங்களாகும். தாண்டலம் கொண்டுள்ள பல்லாக்சோவுலோகயீந்தனைவிகள் கரைசலில் காணப்படும் தனித்தனியான தாண்டலம் ஆக்சைடுகளை உதாரணமாகத் தருகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Szanics, Judit; Kakihana, Masato (1999). "A Novel Tantalic Acid-Based Polymerizable Complex Route to LiTaO3 Using Neither Alkoxides nor Chlorides of Tantalum". Chemistry of Materials 11 (10): 2760. doi:10.1021/cm990160d. 
  2. Inoue, Y (1996). "Synthetic inorganic ion exchange materials XLI: Ion exchange properties of cubic tantalic acid (HTaO3)". Materials Research Bulletin 31 (6): 691. doi:10.1016/0025-5408(96)00050-5. https://archive.org/details/sim_materials-research-bulletin_1996-06_31_6/page/691. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டலேட்டு&oldid=3912293" இலிருந்து மீள்விக்கப்பட்டது