தாதா வைத்யா
தாதா வைத்யா (Dada Vaidya) இந்தியாவின் கோவா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஆயுர்வேத மருத்துவர் ஆவார். இராமச்சந்திர பாண்டுரங்க வைத்யா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1859ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கோவாவின் போண்டா நகரத்திற்கு அருகிலுள்ள கேரி கிராமத்தை தளமாகக் கொண்டு இவர் ஆயுர்வேத பயிற்சியாளராக இயங்கினார்.[1] கோவாவில் உள்ள பல்வேறு தாவரங்களிலிருந்து மருந்துகளை எடுத்து நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வழங்கி வந்தார்.
போர்த்துகீசிய அரசாங்கம் சட்டப்படி அலோபதி மருந்துகளை ஆதரித்தாலும், அலோபதி மருந்துகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு குணமடையும் நம்பிக்கையை இழந்த போர்த்துக்கீசியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இவர் சிகிச்சையளித்தார். இதனால் போர்த்துகீக்கிய அதிகாரிகளின் ஆதரவும் வைத்யாவுக்கு இருந்தது. போண்டா நகரின் மத்திய சதுக்கத்தில் போர்த்துகீசிய அரசாங்கம் இவருக்கு தங்கள் நன்றியைக் காட்ட தாதா வைத்யாவின் சிலையை அமைத்தது.[2]
சமூகப் பணிகள்
தொகு1911ஆம் ஆண்டில், வைத்யா சீதாராம் கெர்கரும் விநாயக் சர்சோதிசியும் இணைந்து கோவா வித்யாபிரசாரக் மண்டல் மற்றும் அதன் முதல் நிறுவனமான ஏ. ஜே. டி அல்மெய்டா உயர்நிலைப் பள்ளியை மத்திய கோவாவின் போண்டா தாலுகாவில் நிறுவினார்.[3]
இறப்பு
தொகு1947ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 6ஆம் தேதியன்று தாதா வைத்யா காலமானார்.